நாங்கள் போராடுவது மக்களுக்காகதான்... வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அதிரடி தகவல்

நாங்கள் போராடுவது மக்களுக்காகதான்... வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அதிரடி தகவல்
News Image

தஞ்சாவூர்: வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராக போராடுகிறோம். எங்களை புரிந்து கொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வரு .28 முதல் 3 நாள் வேலைநிறுத்தம் செய்கிறோம. தீர்வு இல்லையெனில் அக்.26 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: வங்கிகளில் அதிகரித்து வரும் வேலைப்பளுவுக்கு ஏற்ப காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்தமும், அதன்பிறகும் தீர்வு ஏற்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்தப்படும்.

8 லட்சம் பேர் வேலைநிறுத்தம்

வங்கித்துறையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த செப்டம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், வங்கி பரிவர்த்தனைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வருகிறது.

4 சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டும்

தற்போது ஒரு மாதத்தில் 2 சனிக்கிழமைகள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 2 சனிக்கிழமைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நடைமுறையில் உள்ள நிலையில், வங்கி ஊழியர்களுக்கும் 4 சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதற்குப் பதிலாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கக்கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் வாடிக்கையாளர் சேவை வழங்க வங்கி ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

2024-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

இதுதொடர்பாக வங்கி ஊழியர் அமைப்புகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே 2024 மார்ச் மாதத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், நீண்ட காலமாகியும் அது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

“ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊக்கத்தொகையிலும் பிரச்சனை

வங்கிகளின் லாபத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அதிகபட்சமாக 15 நாள் ஊதியம் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் காலிப்பணியிடங்கள்

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே அதிகளவு பணிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தனியார் வங்கிகளைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.

தனியார் வங்கியில் ஒரு கிளைக்கு சுமார் 300 வாடிக்கையாளர்கள் என்றால், பொதுத்துறை வங்கிகளில் ஒரு கிளைக்கு சுமார் 3,000 வாடிக்கையாளர்கள் வரை உள்ளனர். இத்தனை அதிகமான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு சேவை வழங்க வேண்டிய நிலை உள்ளது.

கொரோனா காலத்திலும் வங்கி ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்கினர். அதன் பின்னரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க சதி?

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நோக்கில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. “பொதுத்துறை வங்கிகளில் அடிக்கடி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுத்துறை வங்கிகள் மீது அதிருப்தியை உருவாக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது. பின்னர் தனியார் வங்கிகளுக்கு மக்கள் செல்ல வேண்டும் அல்லது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது இதன் பின்னணியாக இருக்கலாம்.

கிராமப்புற வங்கிகள் பாதிக்கப்படும்

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், அதன் தாக்கம் கிராமப்புற மக்களையே அதிகம் பாதிக்கும். விவசாயம், பெண்கள் முன்னேற்றம், சுயதொழில், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், ஏற்றுமதி உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறையக்கூடும்.

மக்களின் ரூ.245 லட்சம் கோடி சேமிப்பு

பொதுத்துறை வங்கிகளில் சாதாரண மக்களின் சேமிப்பு பணம் மிகப்பெரிய அளவில் உள்ளது. சுமார் ரூ.245 லட்சம் கோடி அளவுக்கு சேமிப்பு பணம் உள்ளது_ அந்த பணத்துக்கு பாதுகாப்பை வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, வங்கி ஊழியர்களின் போராட்டம் ஊழியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; பொதுமக்களின் வங்கி சேவை மற்றும் பணப் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான போராட்டம்.

செப்.22-ல் சமரச பேச்சுவார்த்தை

செப்டம்பர் 22-ம் தேதி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி ஊழியர் அமைப்புகள் நிச்சயமாக பங்கேற்கும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதே எங்களது விருப்பம்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எடுக்கப்படவில்லை என்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும். அதற்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், நிர்வாகமும் ஒன்றிய அரசும் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அக்டோபர் 26-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். “நாங்கள் மக்களுக்காகத்தான் போராடுகிறோம். இதை மக்கள் புரிந்து கொண்டு எங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks