தொடர் விடுமுறை- கிளாம்பாக்கத்தில் பேருந்து

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சென்னையில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை இரவு முதல் மக்கள் மங்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னை கிளாம்பாக்கத்தில் உரிய வகையில் பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இது தொடர்பாக வீடியோ வைரல் ஆன நிலையில், இன்று காலை சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் இரண்டு பெண்கள் கிளாம்பாக்கம் சென்று கூட்டம் உள்ளதா.? பேருந்துகள் வசதி உள்ளதா.?

ஆம்னி கட்டணம் அதிகரிப்பு

என வீடியோ பதிவிட்டுள்ளனர். அதில் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லாமலும், வெறிச்சோடி இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே! லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!

எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!

லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை… pic.twitter.com/EntYRqxNev

— DMK IT WING (@DMKITwing) September 14, 2026

வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகள்

இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது! ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?

தவெகவின் மாற்று அரசியல்

"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது. மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! என திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

Source: Read Full Article