குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தததாக பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை அதிர வைத்த வழக்கு

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வீரமணி தனது 84 வயதில் தமிழ்நாட்டை அதிரவைக்கும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கைது செய்யப்பட்ட அவரின் வழக்கு விசாரணை தகவல்கள் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கடந்த திமுக ஜெம் வீரமணி மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கில் கிடப்பில் போடப்பட்டது. நடப்பாண்டு ஜூலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட, அவ்வளவு தான் பிஞ்சு குழந்தைகளை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதும், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் அவர்களை அனுப்பியதும் தெரிய வந்தது.

12 முதல் 16 வயதுடைய ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளைப் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் ஒருவரையும் விட மாட்டோம் என தவெக அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் வீரமணியின் மேலாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் நிறுவன ஊழியர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கை முடிக்க கடந்த திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும், இதில் அரசியல் புள்ளிகள் தொடங்கி காவல்துறை வரை சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. எனினும் தாங்கள் இந்த வழக்கை மூடி மறைக்கவில்லை என திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கமளித்தார்.

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில்…

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 22, 2026

கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இதனிடையே ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article