தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!

தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
News Image

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் பெண்களின் உயிரிழப்புகளை விட ஆண்களில் உயிரிழப்புகள்  1.10 லட்சம் அதிகம் என்றும், உயிரிழந்தவர்களில்  86 விழுக்காட்டினர் 65 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்படும் காரணங்களில் பெரும்பாலானவை மதுப் பழக்கத்துடன் தொடர்புடையவை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் காலாண்டு இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், 2025&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 93,207 என்றும், அவற்றில் ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 1860, பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91,347 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உயிரிழந்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10,513 என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக உயிரிழந்த  ஆண்களில் 86%, அதாவது 94,792 பேர் 15 முதல் 64 வயது வரையிலானவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமின்றி, 2024ஆம் ஆண்டில் 1.07 லட்சம் ஆண்களும், 2023ஆம் ஆண்டில் 1.07 லட்சம் ஆண்களும் கூடுதலாக உயிரிழந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

என்ன காரணங்கள்?

2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 41% மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன என்பதால், அவற்றுக்கான காரணங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. அவற்றில் ஆண்களின் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள், தற்கொலைகள், மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் கேடுகள், இதயம், சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்கள் சரியான நேரத்தில் கண்டறியப்படாதது ஆகியவை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் கிட்டத்தட்ட இவை தான் காரணங்களாக இருக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற வகையில் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்பட்டுள்ள 4 காரணிகளுக்குமே மூல காரணம் மதுப்பழக்கம் தான் என்பது ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில்   சாலை விபத்துகள், தற்கொலைகள் ஆகியவற்றில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கான முதன்மைக் காரணம் மதுப்பழக்கம் தான் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணும், பெண்ணும் சமம் என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்தாலும், கிராமப்பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் வாழ்வாதாரம் ஈட்டுபவர்களாக ஆண்கள் தான் உள்ளனர். பெற்றோரை பாதுகாத்தல், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பொறுப்புகளை சுமக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கும் போதிலும், மதுவுக்கு அடிமையாவதால் அவர்கள் குறைந்த வயதில் உயிரிழக்கின்றனர். அதனால் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. பெண்கள் இளம்வயதில் கைம்பெண்களாக மாறுவது மட்டுமின்றி,  குடும்பச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவற்றையெல்லாம் ஏராளமான புள்ளிவிவரங்களுடன் பல பத்தாண்டுகளாக பாமக தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இப்போது வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் பாமகவின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது

சென்னை மாகாணத்தின் 4 மாவட்டங்களில் 1937&ஆம் ஆண்டில் இராஜாஜி ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, 1948ஆம் ஆண்டில் ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் முழுமைக்கும் நீட்டிக்கப்பட்ட மதுவிலக்கு 1971&ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதனால், 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது.

ஆனால், 1971&ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் மதுக்கடைகள் மீண்டும்  திறக்கப்பட்டு, இடையில் சில ஆண்டுகள் தவிர இப்போது வரை மது வணிகம் தொடர்வதாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடிக்கப்படும் மதுவின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில்  இரு தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி விட்ட நிலையில், இப்போதுள்ள மூன்றாம் தலைமுறையும் மதுவுக்கு அடிமையானால், தமிழர்களின் மரபணுவில் மதுப் பழக்கம் பதிவாகிவிடும் என்றும், அதன்பின் தமிழர்களை மதுப்பழக்கத்திலிருந்து மீட்க முடியாது என்றும் பொது சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

மது வணிகத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது என்றாலும், அதனால் ஏற்படும் இழப்புகள் மிகவும் அதிகமாகும். மதுவுக்கு அடிமையாவதால் ஏற்படும் மனிதவள பாதிப்புகள் காரணமாக மட்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30% பாதிக்கப்படுகிறது. 2047&ஆம் ஆண்டில் இந்தியாவை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாடு ஆண்டுக்கு 15% பொருளாதார வளர்ச்சியை எட்டும்பட்சத்தில் 2034&35ஆம் ஆண்டிலேயே  ரூ.22.03 லட்சம் என்ற தனிநபர் வருவாயை எட்டி வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற முடியும். தமிழ்நாட்டில் மதுவின் பாதிப்புகளை ஒழித்து விட்டால் இந்த இலக்கை இன்னும் 4  ஆண்டுகள் முன்பாகவே எட்டி விட முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மதுப்பழக்கம் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

பொருளாதாரம், நோயற்ற வாழ்வு, இளம்வயதில் உயிரிழப்பு உள்ளிட்ட எந்தக் காரணிகளின் அடிப்படையில் பார்த்தாலும் மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு தான். தமிழ்நாட்டில் ஆண்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய, மதுவின் கேடுகள் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் இப்போது தொடங்கி ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks