தவெக சார்பில் 40 பிரபலங்களை நட்சத்திரப் பேச்சாளர்களாக நியமித்து , தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதில், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்ட தவெக தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்படி தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆக முடியும் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

எந்த சட்ட அடிப்படையில்?

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் அணிச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான இன்பதுரை எழுப்பியுள்ள கேள்வியில், ’’வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான TVK-யின் Star Campaigners பட்டியலில் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில்?

R.P. Act, 1951 – Section 77(1) மற்றும் ECI வழிகாட்டுதலின்படி, ஒரு கட்சி Star Campaigner ஆக தனது சொந்த கட்சியின் உறுப்பினரையே நியமிக்க முடியும்.

மேலும், Star Campaigners பட்டியல் தேர்தல் அறிவிப்பில் இருந்து 7 நாட்களுக்குள் ECI/ CEO-க்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்சமயம் அந்த காலக்கெடு முடிந்துவிட்ட பிறகு, இனி இவர்கள் தத்தமது கட்சிகளின் சார்பில் புதிதாக விண்ணப்பித்து தங்கள் பெயரில் அனுமதி பெற்று Section 77-ன் செலவு விலக்கைப் பெற முடியாது.

தங்களது சொந்த கட்சித் தலைவர்களாக / கூட்டணிக் கட்சி தலைவர்களாக TVK வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய இவர்கள் அனுமதிக்கப்பட்டால், Star Campaigner செலவு விலக்கு இனி இவர்களுக்கு பொருந்தாதது.

எனவே, ECI விதிகளின்படி இவர்களின் சம்பந்தப்பட்ட உரிய பிரச்சாரச் செலவுகள் மொத்தமும் TVK வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்டம். T. Paulraj v. Election Commission of India (Madras HC) வழக்கில் ECI இதைத்தான் வலியுறுத்தியது.

இவர்களின் பிரச்சார செலவுகள் TVK வேட்பாளர்களின் கணக்கில் அவ்வாறு சேர்க்கப்படாமல் இருந்தாலோ, இதன்மூலம் TVK வேட்பாளர்களின் சட்டபூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, R.P. Act, 1951 – Section 123(6) கீழ் corrupt practice என்பதே தெளிவான சட்டநிலை!’’ என்று இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article