தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர்? காவல் ஆணையர் பாதுகாப்பு ஆய்வு !

தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர்? காவல் ஆணையர் பாதுகாப்பு ஆய்வு !
News Image

தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆய்வு.

தாய்மாமன் தங்க மோதிரம்

"தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக,  முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில் முன்னதாக இந்தத் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் என தகவல் வெளியானது. முதல்வரின் வருகைக்கு தேவையான வசதிகளை மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில்  இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வரின் பாதுகாப்பு

முதல்வரின் பாதுகாப்பு, மக்கள் கூட்டத்தை கையாளுதல் உள்ளிட்ட ஒரு சில  முக்கிய காரணங்களுக்காக இந்த திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறவுள்ள "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் திட்டத் தொடக்க விழாவிற்கு தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகம், விழா நடைபெறும் இடம் மற்றும் முக்கிய நுழைவுவாயில்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையர், பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தங்க மோதிர திட்டம் தொடக்கம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர், தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு அவரது கையால் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்க இருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறை உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இருப்பினும் அரசு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் நிகழ்ச்சி இங்கு நடைபெறும் என உறுதியாக தெரிய வரும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks