’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!

’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
News Image

தாம்பரம் மாநகராட்சியில் அமைக்கப்பட்ட அசோக சின்னம் உள்ளிட்ட இரண்டு சிலைகளின் டெண்டரில் 45 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக இன்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். குறிப்பாக, அந்த இரண்டு சிலைகளையுமே அமைச்சர் சரத் திறந்து வைத்திருந்தது புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த சிலைகள் CSR நிதியிலேயே அமைக்கப்பட்டதாகவும், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

இந்நிலையில், இன்று மின்சார வாரிய ஆய்வு கூட்டத்தை முடித்து செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரிடம், செய்தியாளர்களை அறப்போர் குற்றச்சாட்டு குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், அந்த சிலைகள் CSR நிதியில் இருந்தே அமைக்கப்பட்டதாகவும், பின்னர் ஏன் டெண்டர் விடப்பட்டு, அது ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதோடு, அமைச்சர் சரத், அந்த மாவட்ட் அமைச்சர் என்பதாலேயே ப்ரோட்டோகால் அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு அந்த சிலைகளை திறந்து வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், அது விசாரணையில் தெரியவந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பணியிடமாற்றம்?

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஐ.ஏ.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் கேட்டு சில மாவட்டங்களையும் குறிப்பிட்டு முக்கியமான நபர் மூலம் காய்நகர்த்தி வந்த நிலையில், முறைகேடு புகாரில் சிக்கியிருக்கிறார் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர். இதனால், அவருக்கு உடனடியாக பணியிடம் ஒதுக்காமல், பாலசந்திரை காத்திருப்பு பட்டியலில் வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks