குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?

குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
News Image

மதுரையின் அடையாளமாக திகழ்வது மீனாட்சியம்மன் கோயில். உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெறுகிறது. இதனால், மொத்த மதுரையும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு:

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே மதுரை களைகட்டி காணப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு கோயிலை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்று கருதப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

இதற்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 17.09.2026 காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சீரான மற்றும் தங்கு தடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS pic.twitter.com/5PpHPcAP7x
— ArasuBus (@arasubus) September 15, 2026

16.09.2026 ( இன்று) கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை வரை 50 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்:

கோவை - 30 பேருந்துகள்

அருப்புக்கோட்டை - 25 பேருந்துகள்

விருதுநகர் - 10 பேருந்துகள்

திருப்பூர் - 30 பேருந்துகள்

சிவகாசி - 30 பேருந்துகள்

தேனி - 30 பேருந்துகள்

ராமநாதபுரம் - 30 பேருந்துகள்

ராஜபாளையம் - 30 பேருந்துகள்

திண்டுக்கல் - 20 பேருந்துகள்

இதுமட்டுமின்றி மதுரை மாநகரில் இருந்து திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அம்மனை தரிசிப்பதற்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில் குடமுழுவிற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு பணிகளை அமைச்சர் ரமேஷ் முன்னின்று கவனித்து வருகிறார். அமைச்சர்கள் நிர்மல்குமார், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks