உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா? உடனே சரிபார்ப்பது எப்படி?

உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா? உடனே சரிபார்ப்பது எப்படி?
News Image

தொலைத்தொடர்புத்துறை சமீபத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுடைய பெயரில் சிம் கார்டு பெற்று அதை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. ஒருவேளை கொடுத்தால் அவர்கள் கடுமையான சட்டச் சிக்கலை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சமீப காலமாக போலி சிம் கார்டு பெற்று பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. இதை தடுப்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை.

செப்டம்பர் 21ம் தேதி அன்று தொலைத்தொடர்புத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தொலைதொடர்புச் சட்டம் 2023-இன் கீழ் சிம் கார்டு பெற்று மோசடி சம்பவங்களுக்கு பயன்படுத்தினாலோ அல்லது பிறருக்கு வழங்கினாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சில காலமாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பெற்று மோசடி சம்பவங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அப்படித்தான் சத்தீஸ்கரிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அதில் ஒரு ஏஜென்ட் பொதுமக்களின் அடையாள ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி 25-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு துறை அவரை கண்டுபிடித்து பிளாக்லிஸ்ட் பட்டியலில் சேர்த்துவிட்டது. இவர் ஏன் இந்த 25 சிம் கார்டுகளை வாங்கினார் என்பதையும் டிஜிட்டல் இன்டெலிஜென்ட் தளம் மூலம் ஆய்வு செய்து வருகிறது. இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவர் எத்தனை சிம் கார்ட் பெறுகிறார் என்பதில் தொலை தொடர்பு துறை வரம்பை அமைத்துள்ளது.

இந்தியாவில் பிறந்த ஒருவர் 9 சிம் கார்டு வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டு பெறப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடிக்க அரசின் சஞ்சார் சாதி போர்ட்டலைப் பார்க்கலாம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இதனால் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் சிம்கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதைத் தெரிந்து கொண்டு அதை பிளாக் செய்ய முடியும்.

இதற்கும் சஞ்சார் சாதி இணையதளத்திலேயே ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டு பெற்று யாராவது பயன்படுத்தி வந்தால் அதை கண்டுபிடிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இதனால் பிற்காலத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம். உங்களுடைய அடையாள ஆவணங்கள், பயன்படுத்தப்படாத சிம் கார்டு போன்றவற்றை பத்திரமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். சஞ்சார் சாதி இணையதளத்திற்கு சென்று கேப்ட்சா குறியீடு மற்றும் உங்கள் 10 இலக்க நம்பரை வழங்கினால் போதும். தற்போது ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-யை வழங்கவும். உள் நுழைந்தவுடன் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என்பது டிஸ்ப்ளேவில் தெரியும். தெரியாத நம்பர் இருந்தால் பதற்றம் அடையாதீர்கள். உடனே அதை பிளாக் செய்யலாம். அந்த ஆப்ஷனும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks