தவெக ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களை குற்றம் சாட்ட எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் எங்களுக்கு உரிமை உண்டு என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடியில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் சேது செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தட்டாஞ்சாவடியில் திமுக வெற்றி உறுதி

இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் வெற்றி பெறும். புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உறுதி செய்யும் வகையில் பணிகள் அமைய வேண்டும். வேட்பாளருக்காக உழைக்காமல் மு.க.ஸ்டாலின் ஒருவருக்காக நாம் உழைக்க வேண்டும். புதுச்சேரி எப்போதும் திமுகவின் கோட்டையாக இருக்கிறது. இதுவரை எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு திமுக வேட்பாளர் சேது செல்வத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பது உறுதியாகி விட்டது என கூறினார்.

தவெகவை டெபாசிட் இழக்க செய்வோம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, திமுக முப்பெரும் விழாவில் ஒப்பாரி வைத்ததாக தவெக விமர்சனம் செய்கிறது. முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, திமுக தோன்றியது பற்றி ஆரம்பத்திலேயே மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசவில்லை என நினைத்தால் நீங்கள் அந்த பேச்சை முழுதாக கேட்கவில்லை என்பதே அர்த்தமாகும். முப்பெரும் விழாவில் தவெக ஆட்சியின் அலங்கோலத்தை சுட்டிக்காட்டுபவர் தான் மு.க.ஸ்டாலின். திமுக வந்தால் என்ன செய்வோம் எனவும் கூறினார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகச்சிறப்பான உரையை கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

வரும் காலத்தில் செய்ய வேண்டியவை பற்றியும், தற்காலத்தில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டியும் மு.க.ஸ்டாலின் பேசினார். தவெக ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களை குற்றம் சாட்ட எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் எங்களுக்கு உரிமை உண்டு. மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டில் மட்டுமல்ல புதுச்சேரியிலும் எதிரொலிக்கும். அதனால் தான் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நிற்காமல் பயந்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். எதிரில் நிற்பவர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெறும் என கூறினார்.

இரண்டு நாட்கள் மதுராந்தகத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தால் திமுக டெபாசிட் கூட வாங்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார். அவர் வந்தாதானே நாங்க டெபாசிட் வாங்க மாட்டோம் என சொன்னார். நாங்க வராமலே தவெகவை டெபாசிட் இழக்க வைக்கக்கூடிய ஆற்றல் திமுகவுக்கு, மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளது. புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கிறதே தவிர, மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை. அதற்கான பதிலடியை மக்கள் இடைத்தேர்தலில் தெரிவிப்பார்கள் என பொன்முடி கூறினார்.

Source: Read Full Article