சமூகவலைதளத்தின் தாக்கம்

சமூகவலைதளத்தின் தாக்கம் நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்கிறோம் என தெரியாமல் Home Tour- என்ற பெயரில் வீட்டில் என்ன உள்ளது, கழிப்பறை எப்படி உள்ளது என்பது வரை சுற்றி காண்பித்து வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் ஒரு கட்டத்திற்கு மேலே சென்று வீட்டில் உள்ள பணம், நகைகளை காண்பித்து பந்தாவாக வீடியோவும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நகை பணத்தை பந்தாவாக காண்பித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூப்பர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெண் யூடியூப்பர் பந்தா வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம், விஐபி கார்டன் பகுதியில் வசித்து வரும் யூடியூபர் மதுமிதா–வினோத்குமார் தம்பதியினர் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பாக சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து 118 பவுனுக்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பர் வீட்டில் திருட்டு- கொள்ளையர்கள் கைது

இது தொடர்பாக போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை யார் என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதனையடுத்து யூடிப்பர் வீட்டில் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி(30) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன்,முருகேசன் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Madhumitha Madhu (@madhumithaaaaaaa_3154284)

திருடியது ஏன்.? கொள்ளையர்கள் வாக்குமூலம்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ்வில் அதிகளவில் பணம், நகைகள் காண்பித்து வீடியோ பதிவு செய்தார். எனவே மதுமிதா வீட்டில் நகை பணம் நிறைய உள்ளது. எனவே அங்கு சென்றால் அதிகளவு நகைகளை கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டோம். இதனையடுத்து தான் மதுமிதா வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க வந்ததாக இசக்கி பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Source: Read Full Article