விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இத்தனை தங்க மோதிரமா... மருத்துவமனைக்கே நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் !

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இத்தனை தங்க மோதிரமா... மருத்துவமனைக்கே நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் !
News Image

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயலாக்கத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று(26.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை வருகின்ற 28.09.2026 அன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கவுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய 5 வட்டார அரசு தலைமை மருத்துவமனைகளில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் கீழ்  தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 15.09.2026 அன்று முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன.

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விழாவிற்கான ஏற்பாடுகள், பயனாளிகளுக்கான வசதிகள், ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அலுவலர்கள் பொறுப்புடன் மேற்கொண்டு, முன்னேற்பாடு பணிகளை நிறைவு செய்து, விழா சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.அமுதா ராணி, மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு  அலுவலர்கள் உடனிருந்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks