மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
News Image

நெருங்கும் இடைத்தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக, இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அதே நேரம் தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்மும் தலைமையிலான எம்எல்ஏக்கள் திட்டமிட்டனர். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் 23 எம்எல்ஏக்கள் தனி அணியாக சென்று  தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

2 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

இதனையடுத்து ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அடுத்தடுத்து விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் இந்த தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கரூர், விராலிமலை, பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்து. அதே நேரம் மற்ற இரு தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முதல் ஆளாக களம் இறங்கிய அதிமுக

இந்தநிலையில் ஏற்கனவே வென்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தில் தேர்தல் பணியை முதல் ஆளாக அதிமுக தொடங்கியுள்ளது. அந்த வகையில் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். இதில் யார் பெயர் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

மதுராந்தகம் ,தாராபுரம் தேர்தல் - அதிமுகவில் யாருக்கு அதிக வாய்ப்பு.?

மதுராந்தகம் தொகுதி

கணிதா சம்பத் முன்னாள் எம் எல் ஏ
ஏற்கனவே திருப்போரூர் ( 2001) , மதுராந்தகம் ( 2011) எம் எல் ஏ வாக இருந்தவர்

விவேக் என்கிற விவேகானந்தன்  அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர், இவர் கடந்த முறை சீட் கேட்டவர். இதில் கணிதா சம்பத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தாராபுரம் தொகுதி

P. மகேஷ் குமார்

வழக்கறிஞர் அபிராமி,

ராஜா வின்சென்ட்

இந்த 3 பேரில் மகேஷ் குமாருக்கு அதிக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டார தகவலாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks