‘வண்டிக்கு பிரேக் முக்கியம்... உங்களுக்கு டீ பிரேக்!’ நள்ளிரவில் டிரைவர்களுக்கு மசாலா டீ ,பன், பிஸ்கட் வழங்கி அசத்திய தஞ்சை போலீஸ்!

‘வண்டிக்கு பிரேக் முக்கியம்... உங்களுக்கு டீ பிரேக்!’ நள்ளிரவில் டிரைவர்களுக்கு மசாலா டீ ,பன், பிஸ்கட் வழங்கி அசத்திய தஞ்சை போலீஸ்!
News Image

தஞ்சாவூர்: “டீயை சாப்பிட்டு தெம்பா போங்க... வண்டிக்கு என்ன முக்கியம்? பிரேக் முக்கியம். உங்களுக்கு டீ பிரேக் முக்கியம்... ரைட்டா?” என தனது வழக்கமான பாணியில் பஞ்ச் டயலாக் பேசி, தொலைதூரம் செல்லும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மசாலா டீ வழங்கி, சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த தஞ்சை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனின் செயல் கவனம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் சார்பில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து போலீசார்

தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் மாநகர எல்லைப் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாநகர எல்லையான கோடியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக தொலைதூரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளனரா? உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? நீண்ட நேரம் பேருந்தை இயக்குவதால் சோர்வு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் பரிசோதனை செய்தனர்.

சோர்வுடன் வாகனம் ஓட்டக்கூடாது

நள்ளிரவு நேரங்களில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து ஓட்டுநர்கள் தொடர்ந்து பல மணி நேரம் வாகனம் இயக்குவதால் சோர்வு மற்றும் தூக்க கலக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கும்போது வாகனத்தை இயக்கக்கூடாது என்றும், போதிய ஓய்வு எடுத்த பின்னரே பேருந்தை இயக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும், பசியுடனும் உடல் சோர்வுடனும் வாகனம் இயக்குவது கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் புத்துணர்ச்சியுடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மசாலா டீ கொடுத்து வரவேற்ற போலீசார்

இதற்காக கோடியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் தொலைதூரப் பேருந்துகளை நிறுத்திய போலீசார், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மசாலா டீ வழங்கினர். நள்ளிரவு நேரத்தில் பணியில் இருந்த அவர்களுக்கு டீ வழங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடருமாறு அறிவுறுத்தினர்.

அப்போது காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பஞ்ச் டயலாக் பாணியில், “டீயை சாப்பிட்டு தெம்பா போங்க... வண்டிக்கு என்ன முக்கியம்? பிரேக் முக்கியம். உங்களுக்கு டீ பிரேக் முக்கியம்... ரைட்டா?” என்று கூறி ஓட்டுநர்களின் சோர்வான முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, “இந்தாங்க டீ குடிங்க... சேஃபா போங்க” என்று கூறி அவர்களை பாதுகாப்பாக பயணத்தை தொடரச் செய்தார்.

‘ஃபைன் போடுறது மட்டும் போலீஸ் வேலை இல்லை!’

மேலும், சாலை பாதுகாப்பு குறித்து பேசிய ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், “போலீஸ் உங்களுக்கு ஃபைன் போடுதானு கேட்டுட்டு... நீங்க ஃபைனா போய் சேரணும்னு நினைக்கிறது போலீஸ்தான்!” என்று தனது வழக்கமான பஞ்ச் டயலாக் பாணியில் கூறினார்.  போலீசார் அபராதம் விதிப்பதற்காக மட்டுமல்லாமல், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக தங்களது இலக்கை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் சோதனைகளை மேற்கொள்வதாக அவர் எடுத்துரைத்தார்.

உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன

டீ வழங்கியதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பன், பிஸ்கட், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளும் வழங்கப்பட்டன. நள்ளிரவு நேரத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் அவர்கள் பசியுடனும் சோர்வுடனும் பேருந்தை இயக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் சார்பில் செய்திருந்தனர்.

சிறிது உணவு உட்கொண்டு புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடர வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.

மனிதநேயத்துடன் நடைபெற்ற சோதனை

வழக்கமாக நள்ளிரவு நேர வாகன சோதனை என்றாலே ஓட்டுநர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த சோதனையின்போது ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி போலீசார் அறிவுரை கூறியது வித்தியாசமான அணுகுமுறையாக அமைந்தது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, தூக்க கலக்கத்தில் வாகனம் இயக்குவது, அதிக சோர்வுடன் நீண்ட தூரம் பயணம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் போலீசார் வலியுறுத்தினர்.

ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு

இந்த நள்ளிரவு நிகழ்ச்சிக்கான டீ, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த அறக்கட்டளை நிர்வாகத்தினர் பல்வேறு சமூகப்பணிகளை ொடர்ந்து மேற்ொண்டு வருகின்றனர். மாணவர்கள் கல்விக்கு உதவி, தூய்மைப்பணியாளர்களை கவுரவித்தல், ஏழ்மையான நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்குதல், ஆடைகள் வாங்கி தருதல், வாகனங்களில் ஹெல்மேட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளுதல், வாகன ஓட்டுனர்கள் ஹெல்மேட் அணிந்து வந்தால் பரிசு வழங்குதல் என்று ஏராளமான சமூக நலத் தொண்டுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களின் ஏற்பாட்டில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மசாலா டீ, பன், பிஸ்கட், வாழைப்பழம் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையுடன் இணைந்து நடைபெற்ற இந்த மனிதநேய முயற்சி, நள்ளிரவு நேரத்தில் பணியில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே வரவேற்பை பெற்றது.

“அபராதம் விதிப்பது மட்டுமல்ல... பாதுகாப்பாக வீட்டுக்கு போய் சேர்ப்பதும் முக்கியம்” என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நள்ளிரவு சோதனை, தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசாரின் மனிதநேய அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks