“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி

“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
News Image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேசிய அவர், தவெக ஆட்சி அமைந்த பிறகு, அந்த வழக்கு 3 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததாகவும், இந்த அரசே வீரமணிக்கு உடந்தையாக இருப்பதாகவும் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அவரது பேட்டியின் முழு விவரங்களை பார்க்கலாம்.

“வழக்கை இழுத்தடித்த தவெக அரசு“

ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேசிய இபிஎஸ், திமுக ஆட்சியில் இருந்தபோதே ஜெம் கிரானைட் வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டபோது, நீதிபதி அதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜூன் மாதம் 19-ம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாகவும், அப்போது இருந்த அதிகாரிகள் வாய்தா கேட்டபோது, 4 வாரத்திற்கு பிறகு முழு விவரங்களையும், அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமல், மீண்டும் வாய்தா கேட்கப்பட்டது என்றும், தொடர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி மீண்டும் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, போலீசார், அரசு வழக்கறிஞர் ஆகியோர் தடயவியல் துறை அறிக்கை வரவில்லை என்று கூறியதாகவும் இபிஎஸ் சுட்டிக்காட்டினார்.

“நீதிபதி உத்தரவிட்டதாலேயே ஜெம் வீரமணி கைது“

மேலும், இந்த வழக்கில், அரசு தரப்பில் 3 முறை வாய்தா வாங்கியதால், நீதிபதி கண்டித்ததாகவும், உடனடியாக வீரமணியை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதாலேயே, அவர் கைது செய்யப்பட்டதாகவும், முதலமைச்சர் விஜய்யின் உத்தரவில் வீரமணி கைது செய்யப்படவில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

அதோடு, இதைத்தான் கம்யூனிஸ்ட் பெ. சண்முகம் குறிப்பிட்டார் என்றும், வீரமணி, அரசின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் இபிஎஸ் தெளிவுபடுத்தியதோடு, அரசியல் ஆதாயத்திற்காக தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர்ர் விஜய் சொன்னது அப்பட்டமான பொய் என்றும் குற்றம்சாட்டினார்.

“ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“

தொடர்ந்து பேசிய அவர், போக்சோ வழக்கில் கைதாகியுள்ள வீரமணிக்கு தவெக அரசே உடந்தையாக உள்ளதகாவும், இந்த வழக்கை தவெக அரசு மெத்தனமாகவே கையாண்டதாகவும் விமர்சித்தார். அதற்கு ஆதாரமாக, வீரமணி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும், வணிகவரித்துறை அமைச்சர் பேசியபோது, ஜெம் வீரமணி தனது குடும்ப நண்பர் என்று குறிப்பிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

எனவே, சினிமாவில் நடித்த விஜய், இப்போது நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு இருப்பது  அம்பலமாகிவிட்டதாகவும், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 250 கொலைகள், 300 பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தவெக ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமில்லாமல் நடமாடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks