மிகவும் மதிக்கத்தக்க வகையில் உள்ள நன்கொடைதாரர் மற்றும் உபயதாரர்களுக்கு இந்த அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை - ருக்மணி பழனிவேல்ராஜன்.

கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான திருமதி.ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது செப் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகமே எதிர்பார்ப்பில் உள்ள மதுரை பிரசித்த இந்த இத்திருவிழாவை எந்த வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுத்து விடாமல் ஒருமித்த கருத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களை எந்த ஒரு செயலபாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல் தலையீட்டுடன் கூடிய தன்னிச்சையாக அரசியல் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

கேள்விக் குறியாக உள்ளது.

2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு மீண்டும் இதனை தொண்மை மாறாமல் புனரமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனை தொடங்கி வைத்த சில மாதங்களில் அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் அவர்கள் உடல் நலிவுற்று மறைவுற்றார். அதன் பிறகு அறங்காவலர் குழு தலைவராக நானும், மற்ற உறூப்பினர்களும் பொறுப்பேற்று கொண்ட பிறகு முதலமைச்சர் சவாலான முன்னாள் இப்பணியை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாகவே செய்து வந்தோம். அதிலும் வீர வசந்தராயர் மண்டபம் தூண்கள் அமைக்கும் பணிக்கான கற்கள் கிடைக்கப் பெறுவதில் இருந்த சிரமங்களை தாண்டி அண்டை மாநிலங்கள் வரை தேடிச்சென்றும் இறுதியில் இறைவன் அருளால் தமிழ்நாட்டிலேயே அந்த கிடைக்கப்பெற்றது. பிரத்தியேகமாக பொருந்தக்கூடிய வகையில் அந்த கற்கள் வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு நீதிமன்றம் அறிவுறுத்தி அது பேசுபொருளானது தங்கள் மூலமாக அனைவரும் அறிந்துக் கொண்டனர். ஆனால் விழா சீறும் சிறப்பாக நடைபெற வேண்டிய இந்நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உட்க்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

அனுமதி அட்டைகள் (பாஸ்) பொறுத்தவரை 9000 எனவும், 11000 எனவும் தினமும் ஒரு இலக்கத்தில் தகவல்கள் வெளிவருகிறது. அதிலும் மிகவும் மதிக்கத்தக்க வகையில் உள்ள நன்கொடைதாரர் மற்றும் உபயதாரர்களுக்கு இந்த அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் இதில் விடுபட்டுவிடக் கூடாது என்பதை பட்டியலாக நாங்கள் தயாரித்து வைத்துள்ள இந்த சூழ்நிலையில் அதனை பொறுப்படுத்திடவில்லை. கோவில் நிர்வாக இன்று நேற்றல்ல, 1963ஆம் ஆண்டு காலஞ்சென்ற பிடிராஜன் அவர்கள் தலைமையில் இத்திருகோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்று, மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழிவந்த எங்களின் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மீகத்தையும் நாங்கள் இணைத்து பார்த்ததில்லை. ஆன்மீக திருப்பணிகள் எவ்வளவு தூரம் சீரும் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக அரசியல் இருக்கும் நாங்கள்தான் அதில் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

விழா சிறப்பாக நடைபெறவேண்டும்

தொடர்ந்து அறங்காவல் குழு உறுப்பினர் டாக்டர் சீனிவாசன் பேசியபோது விழா சிறப்பாக நடைபெறவேண்டும் , நடைபெறும் என தெரிவித்தார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Source: Read Full Article