ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!

ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
News Image

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7,515 சதுர அடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரங்கநாத சுவாமி கோயில் நிர்வாகத்தின் இணை ஆணையர் சிவராமகுமார் அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த பத்திரப்பதிவானது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து இதற்கான ஆவணங்களை வெளியிட்டார். அந்த இடத்தில் திமுக அலுவலகம் செயல்படுவதாகவும், அவை தேர்தல் பரப்புரை அலுவலகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.  இந்த மோசடி நடவடிக்கைகளில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும்  அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

விஜய்யை விளாசிய சண்முகம்" src="https://www.youtube.com/embed/7PvdcLXG0II" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இந்த விவரகாரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான மொத்தம் 5 ஏக்கர் 87 சென்ட் நிலத்தில், ஒரு பகுதியில் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சர்வே எண் 762ன் கீழ் உள்ள 7,515 சதுர அடி நிலம், 2022-ஆம் ஆண்டில் திமுக நிர்வாகி ராம்குமாருக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராம்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ள சொத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தார்கள், யார் புகார் கொடுத்தார்கள் என தெரியவில்லை. இது சட்டப்பூர்வமான சொத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசராக இருந்து  மறைந்த வேங்கட வரதாச்சாரியார் என்பவரின் சொத்தாகும். அவரின் 4 வாரிசுகளும் முறையாக பத்திரப்பதிவு செய்துள்ளார்கள். அதற்கான முறையான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்னால் லஞ்ச ஒழிப்புத்துறை அழைத்து என்னிடம் இந்த நிலம் பற்றி விசாரணை நடத்தினார்கள். நாங்கள் ஆவணங்களை எல்லாம் சமர்பித்தோம். இந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை நாங்கள் கேட்போம்.

2013ம் ஆண்டு முதல் இந்த சொத்து என்னிடம் உள்ளது. 2022ல் தான் பத்திரப்பதிவு செய்துள்ளோம். அப்போது அறநிலையத்துறையில் இணை ஆணையராக இருந்த அதிகாரி தடையில்லா சான்று வழங்கும்போது கொடுத்த கடிதத்தில் இருந்த எண்ணானது பத்திரப்பதிவு துறையில் இந்த சொத்துக்கான சர்வே எண் இல்லை. இது கோயிலின் சொத்து பதிவேட்டிலும் இல்லை. ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சில ஊழியர்கள் தவறாக புரிந்துக் கொண்டு அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். நீதிமன்றம் ஆதாரங்கள் அடிப்படையில் எடுக்கும் முடிவு இறுதியானது” என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks