மதுரையில் பனை விதைகள் நடவு செய்யு பணிகள் தீவிரம்.. ஒரே நாளில் ஏகப்பட்ட விதைகள் நடவு!

மதுரையில் பனை விதைகள் நடவு செய்யு பணிகள் தீவிரம்.. ஒரே நாளில் ஏகப்பட்ட விதைகள் நடவு!
News Image

மதுரை மாநகராட்சி,  மண்டலம் 5,  சௌபாக்கியவதி நகரில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி, மண்டலம் 5, சௌபாக்கியவதி நகர், கூத்தியார்குண்டு கண்மாயில் இன்று (26.09.2026) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், உடனிருந்தார். மதுரை மாநகராட்சியின் சார்பில் மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மரநடவு மற்றும் பசுமை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதான சாலையில் சுமார் 230 நிழல் தரும் சாலை மரங்கள்

அதன் ஒரு பகுதியாக, அழகர் கோயில் பிரதான சாலையில் சுமார் 230 நிழல் தரும் சாலை மரங்களும், பாண்டிகோயில் பிரதான சாலையில் சுமார் 100 மரங்களும், ஐயர் பங்களா முதல் உச்சபரமேடு வரையிலான சாலையில் சுமார் 350 மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. தென்கால் கண்மாயில் 5000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம்,  எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள்,  கூத்தியார்குண்டு கண்மாயில் சுமார் 25,000 பனை விதைகளை நடவு செய்திடும் வகையில் பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தேவையான பராமரிப்புப் பணிகள்

இவ்விதைகள் முறையாக விதைக்கப்பட்டு, அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தேவையான பராமரிப்புப் பணிகளையும், மதுரை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் மாநகராட்சி மூலம் இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்மாய், ஏரி மற்றும் குளங்களின் கரைகளில் பனை விதைகளை நடுவது நீர்நிலைகளின் பாதுகாப்புக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏராளமான நன்மைகளைத் தருகிறது. பனை மரங்களை கண்மாய்க் கரைகளில் நடவு செய்வதால் பனை மரத்தின் சல்லி வேர்கள் மண்ணிற்குள் மிகவும் ஆழமாகவும், அடர்த்தியாகவும், ஊடுருவிச் செல்லும். இந்த வேர்கள் கண்மாய்க் கரையின் மண்ணை இறுகப் பிடித்துக் கொள்வதால், பலத்த மழை அல்லது வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. பனை மரங்கள் மழைநீரைத் தங்களின் வேர்கள் வழியாக பூமிக்குக் கீழே கடத்திச் செல்ல உதவுகின்றன. இதனால் கண்மாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks