Saudi Srilanka Tamilan: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை:

இலங்கை கல்முனை பகுதியில் உள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தொழிலாளியான சிவராசா அனோஜன், இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையிலான சமூக வலைதள கமெண்டிற்காக சவூதி அரேபியாவில் மரண தண்டனையை பெற்றுள்ளார். சைபர் குற்றச் சட்டங்களுக்குப் பதிலாக ஷரியா சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று சவுதி தரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5 வருடங்கள் டூ மரண தண்டனை:

மதம் தொடர்பான அவதூறு கருத்துகளை கூறியதாக தொடர்புடைய இணையக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ், அனோஜனுக்கு அதிகபட்ச தண்டனையாக கடந்த ஜூலை 15ம் தேதி அன்று அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டது. அதேநேரம், அவர் மீது ஷரியா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சவுதி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தொடரப்பட்ட வழக்கில் தான் இதன் விளைவாக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாயால் வெடித்த பிரச்னை..!

இலங்கையில் கதிர்காமம் செல்லும் முருக பக்தர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு தேசிய அளவில் பிரபலமான சுப்ரமணி என்ற நாயை, ஒரு இஸ்லாமிய நபர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் இரு சமூகங்களை சேர்ந்த நபர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அந்த வகையில் சிவபெருமானை பற்றி இஸ்லாமிய நபர் பதிவிட்ட கருத்தை கண்டு ஆவேசமடைந்த அனோஜன் தமிழில் இஸ்லாமிய மதத்தை பற்றி காட்டமான பதிலை பதிவு செய்துள்ளார். அந்த கருத்தானது அரபில் மொழிபெயர்க்கப்பட்டு சசுதி அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்படு புகார் அளிக்கப்பட்டது. அதுதொடர்பான வழக்கின் முடிவிலேயே அவருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு தீவிரம்

அனோஜனின் தண்டனை அதிகரிக்கப்பட்டது குறித்து அவரது வழக்கறிஞர் இலங்கைத் தூதரகத்திற்கு வாய்மொழியாகத் தெரிவித்த போதிலும், தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வமான எழுத்துப்பூர்வ தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே, இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, செப்டம்பர் 21 அன்று அனோஜனின் பெற்றோரைச் சந்தித்து, இது தொடர்பாகச் சட்டரீதியான மற்றும் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சவுதியில் ஏற்படும் சட்டச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், குடும்பத்தினர் ஏற்கனவே செலுத்திய தொகையைத் திரும்ப வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது. மேலும் இந்த விவாகரம் தொடர்பான அரசு கடிதத்தை சவுதி மன்னருக்கு ஒரு தூதுக்குழு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்

சுப்ரமணியம் நாய் பிரபலமானது ஏன்?

இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தில் உள்ள முருகன் கோயிலை நோக்கி வருடாந்த பாதயாத்திரையில் ஈடுபட்ட ஏராளமான பக்தர்களுடன் சேர்ந்து, பல நூறு கிலோமீட்டர்கள் காடுகள், கரடுமுரடான பாதைகளைக் கடந்து 34 நாட்களுக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டு இந்த நாய் ஆச்சரியப்படுத்தியது. அந்த பயணத்தின் போது இந்த நாய் சைவை உணவுகளை மட்டுமே உட்கொண்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக அதற்கு சுப்ரமணியம் என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் அது தனது நாய் என உரிமைகோரிய நபர், வீட்டில் இருந்து ஓடிவந்துவிட்டதாக அதை எட்டி உதைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் நீட்சியாக இணையத்தில் வெடித்த வார்த்தை மோதலின் விளைவாக, அனோஜனுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article