’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!

’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’  காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
News Image

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். என்ன காய்சல் என தெரியாமல் மக்களும் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவ நிலை மாற்றம் காரணமாக உண்ணி காய்ச்சல், டெங்கு காய்சல் போன்ற வைரஸ் காயச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் 17,649 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எங்கே போனார் சுகாதாரத்துறை அமைச்சர்?

மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கொசு  உற்பத்தி அதிகரிப்பால் காய்ச்சல் பரவல் வேகமாக பரவி வருகிறது. அடுத்தடுத்த மாதங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எங்கே என சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மக்களின் உயிரை பறிக்கும் அளவிற்கு செல்லும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய அமைச்சர் அருண்ராஜ், தற்போது மக்களின் உயிரை விட தேர்தல் பிரச்சாரமே முக்கியம் என்ற நினைப்பில் தாராபுரம் தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்.

இடைத் தேர்தல் பொறுப்பாளரான அருண்ராஜ்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவித்துள்ள நிலையில், தவெக சார்பாக தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாராபுரத்தில் முகாமிட்டுள்ள அருண்ராஜ், பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்தவித சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லையென சமூகவலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தாராபுரமே கதியென கிடக்கிறார் அமைச்சர் அருண்ராஜ்.

அருண்ராஜ் ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரி மட்டுமல்ல. அவர் ஒரு மருத்துவர். அப்படியிருந்தும் மக்களை பாதிக்கும் இந்த டெங்கு பரவலின் தீவிரத்தை உணராமல், தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அருண்ராஜை விமர்சித்த அண்ணாமலை அமைப்பு நிர்வாகி

இது தொடர்பாக வி தி லீடர்ஸ் அமைப்பின் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் அஸ்பயர் ராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது, சுகாதாரத் துறை அமைச்சர் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசின் நடவடிக்கைகளில் தீவிரமான குறைபாடுகள் வெளிப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தினசரி பாதிப்புகள் செப்டம்பர் 14ஆம் தேதி 61 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி 283 ஆக உயர்ந்துள்ளதாகவும். சென்னையில் செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 614 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் பதிவான பாதிப்புகளைவிட ஏற்கனவே 18% அதிகமாகும். ஆகஸ்ட் மாத பாதிப்புகளும் கடந்த ஆண்டைவிட 66% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெங்குவை கண்டுகொள்ளாத அமைச்சர் – அஸ்பையர் சுவாமிநாதன் விளாசல்

அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறை அமைச்சர் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் களத்தில் இருந்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடவும், டெங்குக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கவும் வேண்டிய நேரம் இது. நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார். இதே போல சமூக வலைதளத்தில் பலரும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எங்கே என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks