மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்ற முதல்வர் விஜயின் அறிவிப்பை பாராட்டி அஜித்குமார் கடிதம் எழுதியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் முதலமைச்சர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என விஜய் அறிவித்தார். சமீபத்தில் லண்டன் சென்று வந்தோம். எதிர்க்கட்சிகள் என்ன மாதிரியாக திட்டினார்கள் என்பது தெரியும். தேர்தலுக்கு முன்னால் அப்படி திட்டு வாங்கி தான் ஜெயிச்சோம்.

ஏன் போனோம் என யாருக்கும் தெரியாது. அங்கு என்ன மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இந்தியாவில் உலக நாடுகள் மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகள் எங்கேயாவது உள்ளதா?. குஜராத், புனே, டெல்லியில் அப்டேட் செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு எல்லாம் 30 ஆண்டுகளுக்கு பின்னால் இருக்கிறது. எந்த அரசு உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை.

இப்படியான நிலையில் தான் அஜித் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கக்கூடியவர்களுக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. நிறைய பேர் தன் சொந்த பணத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கி நெஞ்சாலையில் அதிவேகமாக சென்று பயிற்சி பெறுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படுகிறது.

தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமல்லாமல் எல்லா விளையாட்டுகளும் மதிப்பு மிக்கவை தான். நாம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். ஆனால் விளையாட்டுத்துறையில் கடந்த 100 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டாக பார்க்கப்பட்டது. ஆனால் சேப்பாக்கம் மைதானம் தொடங்கி அனைத்து இடங்களிலும் மைதானங்கள் வந்த பிறகு சாதாரண ஏழை மக்களும் அந்த விளையாட்டை விளையாட தொடங்கினார்கள்.

அந்த மாதிரி தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்களுக்கு விடுதி போன்றவை தரமாக இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி பதக்கம் வெல்ல முடியும்.இப்படியான நிலையில் தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற விஜயின் அறிவிப்புக்கு அஜித் பாராட்டு தெரிவித்துள்ளார். இது ஒரு சிறிய அடி என்றாலும், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல் என குறிப்பிட்டுள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களும் மிகப்பெரிய வெற்றியடையவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

Source: Read Full Article