வடகிழக்குப் பருவமழை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை - செயலாளர் கள ஆய்வு!

வடகிழக்குப் பருவமழை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை - செயலாளர் கள ஆய்வு!
News Image

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை : மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம் – மதுரையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு. தாரேஸ் அகமது, அவர்கள் நேரில் கள ஆய்வு மற்றும் விரிவான ஆலோசனைக் கூட்டம்.

வடகிழக்குப் பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகத் தொடங்கியுள்ள சூழலில், மழைக்காலங்களில் பொதுமக்களைத் தாக்கும், டெங்கு, காலரா, உன்னி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட தொற்றுநோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்யும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.தாரேஸ் அகமது, இன்று (24.09.2026) மதுரை மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நன்னீர் தேங்கும் தொட்டிகள் மற்றும் கொசு உற்பத்தியாக வாய்ப்பு

முன்னதாக, மதுரை மாநகராட்சி மண்டலம்-3, வார்டு எண் 50-க்குட்பட்ட சிம்மக்கல் LNP அக்ரஹாரம் தெருவில் கள ஆய்வு மேற்கொண்ட செயலாளர் அவர்கள், வீடு, வீடாகச் சென்று நன்னீர் தேங்கும் தொட்டிகள் மற்றும் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்களைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நோய் நிலவரங்கள் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டன. செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது...," தமிழ்நாட்டில் 23.09.2026 வரை 17,939 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தமிழக அரசால் மாநிலம் முழுவதும் டெங்கு RT-PCR பரிசோதனை மையங்கள் 131 ஆக அதிகரிக்கப்பட்டு, இதுவரை 2.23 இலட்சம் பரிசோதனைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக நோய்த்தொற்று தொடக்க நிலையிலேயே துல்லியமாகக் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு விகிதம் 0.05% என்ற மிகக் குறைந்த அளவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட அதிக பாதிப்பு பதிவாகும் மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 23.09.2026 வரை 288 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளில் 105 பேரும், நகராட்சிகளில் 11 பேரும், பேரூராட்சிகளில் 9 பேரும், ஊரக ஊராட்சிப் பகுதிகளில் 163 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு பதிவான பகுதிகள் தனித்தனியாகக் குறிக்கப்பட்டு, அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு விவரங்கள் நாள்தோறும் கண்காணிப்பு

களப்பணிகளைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,818 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் பாதிப்பு விவரங்கள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வீடு வீடாகக் காய்ச்சல் கண்காணிப்பு, ரத்தப் பரிசோதனை மற்றும் கள ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கட்டுமானப் பகுதிகள், வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் காலி மனைகளில் தேங்கும் கழிவுநீர் மற்றும் நன்னீர் ஆதாரங்களை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 26,303 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களும் (DBC), மதுரை மாவட்டத்தில் மட்டும் 1,637 பணியாளர்களும் களத்தில் ஈடுபட்டுள்ளனர். கொசுப்புழுக்களை அழிக்க ‘அபேட்’ (Abate) மருந்துகள் தெளித்தல் மற்றும் குடியிருப்புகளில் முதிர் கொசுக்களை அழிக்கப் புகை மருந்து (Fogging) அடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.மருத்துவமனைகளின் தயார்நிலையைப் பொறுத்தவரை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் தலைமை மருத்துவமனைகள் வரை ஆரம்பநிலை நோயறிதல், நவீன ஆய்வகப் பரிசோதனைகள், எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், போதிய மருந்துகள், திரவ சிகிச்சை (Fluid Management) மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் முழு தயார்நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் காய்ச்சல் மேலாண்மை குறித்த தொடர் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நோயாளிகள் அதிகளவில் கண்டறியப்படும் பகுதிகளில் உடனடியாக களமிறங்க மாநில அளவில் 38 மாவட்ட விரைவு நடவடிக்கை குழுக்களும் (RRT), 388 வட்டாரக் குழுக்களும், மதுரை மாவட்டத்தில் 19 வட்டார விரைவு நடவடிக்கைக் குழுக்களும் தயார்நிலையில் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் ஒருங்கிணைந்து கூட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

தீவிர கண்காணிப்பு, கொசு உற்பத்தி

வடகிழக்குப் பருவமழைக் காலம் முழுமையாகத் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, தீவிர கண்காணிப்பு, கொசு உற்பத்தி மூலங்களை அழித்தல் மற்றும் மருத்துவத் தயார்நிலை ஆகியவை மேலும் வேகப்படுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவுகள் (SNCU - Special Newborn Care Units) முழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளில் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், திரவ சிகிச்சை மருந்துகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தட்டுப்பாடின்றி போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.தாரேஸ் அகமது, இந்த நிகழ்ச்சியில், மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிலை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks