தஞ்சாவூர்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் பாபநாசம் கீழகஞ்சி மேட்டில் உள்ள சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சுக.சரவணன் இல்லத்தில் நடந்தது.

அனைவரையும் மாநில அமைப்பு செயலாளர் சுக.சரவணன், வரவேற்றார். சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகமதுஇப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் கிருஷ்ணன் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மாநில மகளிர் அணி துணை செயலாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் அருணாசலம் துணை செயலாளர் ஆனந்தன் துணைத் தலைவர்.சமசூதீன், திருவையாறு ஒன்றிய தலைவர் தண்டபாணி, அரியலூர் ஒன்றிய தலைவர் தனசெயன், வீரமாங்குடி சுரேஷ்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் மாநில மாவட்ட வட்டார ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள கரூரில் வந்த விவசாயி கந்தசாமி மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டார் இறந்த விவசாயி கந்தசாமிக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து கொள்கிறது மேலும் அவரை இழந்து வாழும் குடும்பத்திற்கு இறப்பு இழப்பீடு நிதியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கொண்டு பயிர் செய்ய முடியாது. தமிழக அரசு நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் மூலம் உடனடியாக கர்நாடக அரசிடம் நமக்கு உரிய தண்ணீர் பெற்று சம்பா சாகுபடியை காப்பற்ற துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாபநாசத்தில் முக்கிய பாசன வாய்க்காலான அன்னுக்குடி வாய்க்கால்கள் நீண்ட நெடுங்காலமாக தூர் வாரப்படாமல் உள்ளது இதனால் இந்த பகுதியில் பல ஆயிரக்கணக்கான சாகுபடி வயல்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகிறது. எனவே அன்னுக்குடி வாய்க்கால்களை உரிய துறை அதிகாரிகள் உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபநாசம், கும்பகோணம், அம்மாபேட்டை பகுதிகள் நெல் அதிகமாக சாகுபடி செய்யும் பகுதியாகும். எனவே மழை காலங்களில் விவசாயிகள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு பயிர் சாகுபடி செய்யும் நெல் மூட்டைகள் திறந்த வெளி அரசு கொள்முதல் நிலையங்களில் வெளியே அடுக்குவதால் நெல் மூட்டைகள் முழுவதும் தண்ணீரில் நனைத்து முளைத்து விடுகிறது. விவசாயிகளுக்கும் அரசுக்கும் நஷ்டங்கள் ஏற்படுகிறது. எனவே பாபநாசம் கும்பகோணம் அம்மாபேட்டை பகுதியில் நவீன வசதிகள் கொண்ட அதிக அளவில் நெல் இருப்பு குடோன்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

பாபநாசம், திருவையாறு. திருக்காட்டுப்பள்ளி பகுதி அதிகமாக நெல்லுக்கு மாற்றாக வாழை, வெற்றிலை அச்சு வெல்லம் சாகுபடி செய்யப்படுகிறது எனவே உடனடியாக இந்த பகுதியில் வாழை, வெற்றிலை, அச்சு வெல்லம் விற்பனை சந்தையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் பகுதியில் தமிழக அரசு உடன் நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும். பாபநாசம் பகுதியில் கிளை வாய்க்கால்கள் உடனடியாக தூர் வார வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாபநாசம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கோ.சதீஷ் நன்றி கூறினார்.

Source: Read Full Article