மதுரை மாமன்றத்தில் வெடித்த கும்பாபிஷேகம் பாஸ் விவகாரம்: முறைகேடு நடந்ததாக வாக்கு வாதம் !

மதுரை மாமன்றத்தில் வெடித்த கும்பாபிஷேகம் பாஸ் விவகாரம்: முறைகேடு நடந்ததாக வாக்கு வாதம் !
News Image

தவெக அரசுக்கு ஆதரவாக சில அதிமுக பெண் மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் அதிர்ச்சியடைந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்.

கும்பாபிஷேகம் பாஸ் விவகாரம்

மதுரை மாநகராட்சியின் 49 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் நாகராஜன் மற்றும் ஆணையாளர் கௌரவ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் கும்பாபிஷேகம் விழா தொடர்பாக மேயர் நாகராஜன் உரையாற்றியபோது மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு நிற ஆடைகளுடன் வந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஸ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக பதாகைகளை ஏந்தி அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக முழக்கங்களை  எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேயர் மாமன்ற கூட்டத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி அவைக்காவலர்கள் மூலமாக வெளியேற்ற  வேண்டும் அறிவுறுத்தினார். திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தபோது  48 ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரூபினிகுமார் மற்றும் 30 ஆவது வார்டு உறுப்பினர் வசந்தா தேவி மற்றும் 52 ஆவது வார்டு மதிமுக உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் தவெக அரசு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதாக முழக்கங்களை எழுப்பினர். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் சிலர் திடிரென தவெக அரசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது சக அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினா்

திமுக உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் கூட்டம் நடத்துவதற்கு போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் திமுக மாமன் உறுப்பினர்கள் திரும்பி வரும் வரை தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் மேயர், ஆணையாளர், மற்றும் மாமன்ற  உறுப்பினர்கள் காத்திருந்தனர். வெளிநடப்பு செய்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் வந்த பின்னர் 28 தீர்மானங்கள் மற்றும் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது மறைந்த பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் இல்லம் அமைந்திருந்த தெருவிற்கு சாலமன் பாப்பையா தெரு என பெயர் சூட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய மேயர் நாகராஜன் :-

தவெக அரசு சில துறைகளில் தனியார்மயத்தை அனுமதிப்பதை ஏற்க இயலாது எனவும், பாதாளசாக்கடை பணிகளை தனியாருக்கு வழங்குவதை இந்த மாமன்றம் அனுமதிக்காது என்றார். இதனை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள்  தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர். கும்பாபிஷேகம் பாஸ் விவகாரத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக பெண் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் தவெக அரசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks