மதுரை மாவட்ட, ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்கள் தொடர்பான போலியான செய்தி குறித்து மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை மற்றும் விளக்கம்.

நாளிதழ்களில் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (வ.ஊ) கடந்த 11.09.2026 அன்று நாளிதழ்களில் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன் விவரம்: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்: ஓட்டுநர் (1 பணியிடம்) எழுத்தர் (1 பணியிடம்)

தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்: அலுவலக உதவியாளர் (1 பணியிடம்) – திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்: அலுவலக உதவியாளர் (1 பணியிடம்)

போலி செய்தி குறித்த எச்சரிக்கை:

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர், திட்ட இயக்குநர் பெயரில் போலியான செய்தி நறுக்கு (Fake Press Cutting) ஒன்று மேற்கண்ட நான்கு பணியிடங்களையும் ஒன்றிணைத்து ஒரே விளம்பரமாக (Single Advertisement), உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வயது வரம்பு தவறாகக் குறிப்பிடப்பட்டும், சட்டப்படியான இன சுழற்சி (Roster System) முறை விடுபட்டும், நாளிதழில் வெளியானது போன்று சித்தரிக்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கவனத்திற்கு:

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான போலி செய்தியாகும். இத்தகைய தவறான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளின்படி வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளுமாறும், போலி செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article