தெலங்கானா மாநிலத்தில் டீக்கடை வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரின் மனைவியும், காதலனும் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்திற்குப்பட்ட ராம்நகர் காலனியில் கரீம் மற்றும் சலீமா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் சிறிய அளவில் ஒரு டீக்கடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சலீமா நெல்லூரில் உள்ள தர்காவிற்கு சென்றுள்ளார். மறுநாள் 10ம் தேதி கரீம் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கரீம் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் ஹூசைன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கரீமின் குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த விசாரணையில் அவருக்கும், சலீமாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மனக்கசப்பு இருந்ததை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் சலீமாவின் போனை ரகசியமாக ஆய்வு செய்தனர். இதனையடுத்து அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். சலீமாவிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கும் அவருக்கும் பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டார்.

அதாவது சலீமா பேகத்திற்கும், கௌஸ் பாஷா இடையே தகாத உறவி இருந்துள்ளது. சுமூகமாக சென்றுக் கொண்டிருந்த கரீம், சலீமா வாழ்க்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌஸ் பாஷா உள்ளே நுழைந்துள்ளார். இவர் வனபர்த்தி மாவட்டம், ரேவல்லி மண்டலத்திலுள்ள நாக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சலீமா பேகத்திற்கு உறவினர் முறையாவார். அதனால் ஆரம்பத்தில் கரீமிற்கு சந்தேகம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் நாளடைவில் இருவருக்குமிடையே இருந்த தகாத உறவால் சலீமா, கரீம் இடையே தகராறு வெடித்தது.

இருவரும் அடிக்கடி சண்டையிட்ட நிலையில் இந்த விவகாரம் குடும்பத்தினரிடையே தெரிய வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் பல முறை பஞ்சாயத்துகள் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் கரீமை கொலை செய்தால் அவரின் சொத்துகளை நாம் அனுபவிக்கலாம் என சலீமாவும் கௌஸ் பாஷாவும் திட்டம் தீட்டினர். இதற்காக திட்டம் போட்டபடி செப்டம்பர் 9ம் தேதி சலீமா பேகம் தர்காவுக்கு புறப்பட்டார். கரீம் வீட்டில் தனியாக இருப்பதால் அவரை கொல்வது சுலபமாக இருக்கும் என கௌஸ் பாஷா ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்துள்ளார்.

செப்டம்பர் 10ம் தேதி கரீம் வீட்டில் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுதங்களால் கொடூரமாக குத்தி கொலை செய்தார். பின்னர் கௌஸ் பாஷா தான் அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த ஆடை, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் என அனைத்தையும் புதரில் வீசிவிட்டு தன் சொந்த கிராமத்திற்கு எதுவும் நடக்காதது போல திரும்பிச் சென்றிருக்கிறார். கடைசியில் குடும்ப உறுப்பினர்கள் சொன்ன தகவலால் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனால் சலீமா பேகம்,கௌஸ் பாஷா இருவரின் செல்போன் உரையாடல்கள் அனைத்து ஆதாரமாக கைப்பற்றி இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article