மதுரை ரிங் ரோடு இருள் நீங்க உயர்நீதிமன்றம் உத்தரவு: பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

மதுரை ரிங் ரோடு இருள் நீங்க உயர்நீதிமன்றம் உத்தரவு: பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?
News Image

மதுரை ரிங் ரோடு மற்றும் அதனுடன் இணையும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் போதிய மின்விளக்குகள் அமைக்கவும், இரவு நேர காவல் மற்றும் சிசிடிவி கண்காணிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மாநில நெடுஞ்சாலை துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில், “திருமங்கலம் முதல் மதுரை வரையிலான ரிங் ரோடு மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, வண்டியூர் சுங்கச்சாவடி முதல் சிந்தாமணி சுங்கச்சாவடி வரையிலும், சிந்தாமணி முதல் வளையங்குளம் சுங்கச்சாவடி வழியாக NH-44 இணையும் பகுதி வரையிலும் பல இடங்களில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்குகள் இல்லை.  சுங்கச்சாவடிகளுக்கு அருகே சில மையத்தடுப்பு விளக்குகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு அடுத்த சுங்கச்சாவடி வரை நீண்ட தூரத்திற்கு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது, இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட சாலைப் பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையில் ஏற்கனவே விபத்துகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, போதிய வெளிச்சம் இல்லாததால் சிசிடிவி காட்சிகளில் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை துறை தரப்பில் பதில் மனு தாக்கல்

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால், இரவு நேரங்களிலும் இந்த சாலைப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது, எனவே பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த 02.09.2026 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் சுங்கச்சாவடிகள் மற்றும் NH-44 இணைப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர சாலைப் பாதுகாப்பு மற்றும் மின்விளக்கு ஆய்வு நடத்தி, இருள் சூழ்ந்த மற்றும் விபத்து அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, போதிய மின்விளக்குகள் அமைக்கவும், இரவு நேர காவல் ரோந்து, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் அவசரகால சேவைகளை வலுப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி வி கார்த்திகேயன் ஆர் சக்திவேல் அமர்வு

வழக்கு தொடர்பாக, மாநில நெடுஞ்சாலை துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks