அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
News Image

நடிகர் விஜய் சேதுபதி கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து பேசிய கருத்துக்களை தவெக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். தற்போது இந்த வார இறுதிக்கான பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் இதில் விஜய் சேதுபதியின் பேச்சு மறுபடியும் கவனத்தை ஈர்த்துள்ளது .

மீண்டும் சீண்டிய விஜய் சேதுபதி

இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் , இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று எந்த முயற்சியும் எடுக்காமல் சும்மா இருக்கும் போட்டியாளர்களை அடையாளம் காணவிருக்கிறார்கள். அவர்களை என்ன செய்யலாம் என ரசிகர்கள் முடிவு செய்கிறார்கள். இதற்கான ப்ரோமோவில் பேசிய விஜய் சேதுபதி " நம்ம போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது 'நான் யாருனு இந்த உலகத்துக்கு காட்டுறேன்' என்று முயல் மாதிரி துள்ளி குதித்து உள்ளே போவாங்க. அப்படி போனபிறகு விட்டில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய எந்த வித முயற்சியும் எடுக்காமல் ஆமை மாதிரி பதுங்கிவிடுவார்கள். அப்படியான முயல் ஆமைகளை இன்று நாம புகைபோட்டு புடிக்கிறோம். பிடித்து உங்கள் கையில் குடுக்கிறோம். என்ன பண்ணலாம்னு நீங்க பாத்து செய்யுங்க" என்று பேசியுள்ளார்.  இந்த கருத்தும் தற்போது தவெக ஆதரவாளர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது.

தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தற்போது அவர் மணிரத்னம் இயக்கும் இஞ்சி வெல்லம் படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் ஹவுஸ் லீடராக இருந்த ஷாதிகாவிடம் அவர் பேசிய சில கருத்துக்கள் தவெக ஆதரவாளர்கள் இடையே பெரியளவில் விவாதத்தை கிளப்பியது

"தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சினைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு விலகுவது தலைவருக்கான தகுதி அல்ல" தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனது முடிவுகளுக்கும், அந்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்" என விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

விஜய் சேதுபதி முதல்வர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு இந்த கருத்துக்களை பேசியதாக புரிந்துகொண்ட தவெக ஆதரவாளர்கள் விஜய் சேதுபதியை விமர்சிக்கத் தொடங்கினர். தவெக கட்சி உறுப்பினர்கள் சிலரும் இதுகுறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள்.  இந்த பிரச்சனை பெரிதாகவே விஜய் சேதுபதியின் கருத்து குறித்து விஜய் தொலைக்காட்சி நிறுவனம் விளக்கமளித்து அறிககை ஒன்றை வெளியிட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks