இரண்டு ஹோம் லோன் எடுத்தால் வரிச் சலுகை உண்டா? நிபுணர்கள் விளக்கம் இதோ!

இரண்டு ஹோம் லோன் எடுத்தால் வரிச் சலுகை உண்டா? நிபுணர்கள் விளக்கம் இதோ!
News Image

இன்றைய விலைவாசி உயர்வில் கையில் பணத்தை வைத்துக்கொண்டு சொந்த வீடு கட்ட ஆரம்பித்தாலும் பணம் பாதியில் காலியாகி விடுகிறது. இப்படி கஷ்டப்படும் பலருக்கு வங்கிகள் வழங்கும் ஹோம் லோன் பெரிதும் உதவி வருகிறது. அப்படி சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹோம் லோன்களைப் பெற்றிருக்கலாம். இரண்டு லோன் பெற்றிருந்தாலும் இரண்டுக்கும் வரிச் சலுகைகள் கிடைக்குமா? என்ற சந்தேகம்  வரலாம். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஆஸ்க் வாலெட் வைப் என்பது தனிநபரின் பணம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு மெயில் மூலம் உங்களுடைய சந்தேகங்களை எழுதி அனுப்பலாம். அதற்கு நிபுணர்கள் பதிலளிப்பார்கள். அப்படி கேட்கப்பட்ட கேள்விதான் இது. இரண்டு லோன் பெற்றிருந்தால் இரண்டுக்கும் வரி சலுகைகள் கிடைக்குமா?  என்றால், இந்தியாவில் பிறந்த ஒருவர் சட்டதிட்டங்களின்படி எத்தனை ஹோம் லோன் வேண்டுமானாலும் வாங்கலாம். அதை வைத்து எத்தனை வீடு வேண்டுமானாலும் சொந்தமாக வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு கிடைக்கும் வரிச் சலுகைகள் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டே கிடைக்கும். உதாரணமாக நீங்கள் சொந்தமாக குடியிருக்க வீடு வாங்கினாலும் வரிச் சலுகைகளுக்கு வரம்பு இருக்கிறது. அதேபோல நீங்கள் வாடகை வீடு கட்டி இருக்கிறீர்கள் என்றாலும் அதற்கும் வரி விலக்கு கிடைக்கும். இதற்கும் அரசு சில விதிகளை நிர்ணயித்திருக்கிறது.

பழைய வரிமுறையின் கீழ் நீங்கள் சுயமாக பயன்படுத்த வீடு கட்டி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வைத்திருக்கும் எல்லா கடன்களுக்கும் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். அதுவே நீங்கள் ஹோம் லோன் பெற்று வாடகைக்கு வீடு கட்டி விட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ரூ.2 லட்சம் என்ற வரம்பு இல்லை. முழு வட்டியையும் கழித்துக் கொண்டு வரி செலுத்தலாம். உங்களுக்கு 1 வருடத்தில் நீங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டியால் நஷ்டம் ஏற்படுகிறது. அதைவிட உங்களுடைய வாடகை வருமானம் குறைவாக இருக்கிறது என்றால்.

நீங்கள் உங்கள் மற்ற வருமானத்துடன் சேர்த்து ரூ.2 லட்சம் வரை விலக்கு பெற முடியும். உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ரூ.1 லட்சம் வாடகை கிடைக்கிறது. ஆனால் அந்த ஆண்டில் நீங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டி ரூ.4 லட்சம் வரை செல்கிறது என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும். எனவே அந்த ஆண்டு உங்கள் சம்பள வருமானத்தில் ரூ.2 லட்சத்தை மைனஸ் செய்து கொள்ளலாம். மீதம் இருக்கும் ரூ.1 லட்சத்தை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் சென்று மைனஸ் செய்யலாம்.

அடுத்து வரும் 8 ஆண்டுகளுக்கு இதை செய்யலாம். உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கில் காட்ட அரசு வழங்கும் கால அவகாசமே இந்த 8 ஆண்டுகள். ஆனால் அதன் பிறகு உங்களால் அந்த நஷ்டத்தை கணக்கு காட்ட முடியாது. ஆனால் புதிய வரிமுறையின் கீழ் அசல் தொகைக்கும் எந்த வரிச் சலுகையும் கிடையாது. அதேபோல சுயமாக வீடு கட்டி குடியிருக்கும் நபர்கள் பெற்ற கடனுக்கு. அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு கிடையாது. வாடகைக்கு விடப்பட்ட சொத்தாக இருந்தால் வாடகை வருமானத்தைப் பொறுத்து சில சலுகைகள் கிடைக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks