காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - திட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்!

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.

பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article