பேரப் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுவாரா சேகர்பாபு ? - பருவமழை ஆய்வில் வெடித்த அரசியல் புயல்

பேரப் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுவாரா சேகர்பாபு ? - பருவமழை ஆய்வில் வெடித்த அரசியல் புயல்
News Image

"வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை"

சென்னை திருவொற்றியூர் மண்டலம் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் , மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.

திருவொற்றியூர் பகுதியில் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மண்டலம் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் மழை பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல் கட்டமாக ஆய்வு கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது ;

ஆபாசமாகவும் , அவதூறாகவும் , கீழ்தரமாகவும் , கேவலமாகவும் பேசுவது தான் திமுகவின் அரசியல். திமுகவிற்கு வேறு அரசியல் தெரியாது திமுகவில் கருத்தியல் ரீதியாக பேசுவதற்கு இன்று ஆட்களை கிடையாது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மிக கேவலமாக பேசியுள்ளார்.

ஒரு அறநிலையத் துறை அமைச்சராக இருந்து ஆன்மீக ஸ்தலங்களை நிர்வகிக்கக் கூடிய அமைச்சராக இருந்த சேதர்பாபு மிகக் கேவலமாக வார்த்தைகளை மேடையில் பேசி வருகிறார்.

பெண்கள் - பேரப் பிள்ளைகளுக்கு போட்டு காண்பிப்பாரா ?

அரசியல் நாகரிகம் திமுகவில் அழிந்து விட்டது அரசியல் நாகரிகம் என்றால் என்னவென்று திமுகவிற்கு தெரியாது. மூன்றாம் தர பேச்சாளர்கள் போன்று திமுக - வினர் பேசி வருகிறார்கள். சேகர்பாபு பேசிய பேச்சை அவரது வீட்டில் இருக்கும் பேரப் பிள்ளைகள் பெண்களுக்கு போட்டு காண்பிப்பாரா ? இதற்குப் பெயர் அரசியலா ? இப்படிப்பட்ட செயல்கள் வன்மையாக கண்டிக்க கூடியது.

கீழ்த்தரமான அரசியலை செய்ய சொல்லி எங்களுடைய முதல்வர் எங்களுக்கு கற்றுத் தரவில்லை. எங்களை பொறுத்தவரை டீசன்டாக தான் பேச வேண்டும் நேர்மையாக பேச வேண்டும் என்பதை தான் முதல்வர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இவர்களை போன்று பேசுவதற்கு எங்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் எங்கள் முதல்வர் எங்களை அவ்வாறு வளர்க்கவில்லை.

"அரசியில் என்ற பெயரில் ஆபாசம் பேசும் திமுக"

மு.க ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை எவ்வாறு வளர்த்திருக்கிறார் என்பதற்கு இது உதாரணம். அண்ணாவின் திமுகவை போன்று தற்பொழுதைய திமுக இல்லை. அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும் அவதூறையும் பேசுவதையே வேலையாக வைத்துள்ளார்கள் திமுக வினர்.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சீமான் விமர்சனம் செய்துள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ; சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும் கவுன்சிலர் ஆவதற்கான வழியை சீமான் பார்க்க வேண்டும். அதன் பிறகு ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி பேசுவதற்கான வேலையை அவர் பார்க்கட்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks