ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்

ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்
News Image

"திருமணம் மீறிய உறவு"

திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் 26 வயதுடைய பாலச்சந்திரன். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே போல், புதிய மின்னூர் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் 36 வயதுடைய வசந்த் , ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், வசந்துக்கும் காவியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து பாலச்சந்திரனுக்கு தெரிய வந்த நிலையில், அவர் தனது மனைவி காவியாவிடம் இது தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனிடையே பாலச்சந்திரனுக்கும் வசந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் , அது பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதில் பாலச்சந்திரன் தாக்கியதில் காயமடைந்த வசந்த், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது மாமியார் வீட்டில் இருந்த பாலச்சந்திரன் தனது மாமியார் வீட்டில் இருந்த சிமெண்ட் கூரையின் கம்பியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த காவியா, அவரை மீட்டு ஆட்டோ மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று பாலச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலச்சந்திரனின் உயிரிழப்புக்கு திருமணத்தை மீறிய உறவு விவகாரம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks