தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று வேலைநாடுநர்கள் தங்களது சுய விபர குறிப்பு (BIO DATA), கல்விச் சான்றிதழ்களின் நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.10.2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மதுரா கல்லூரி, மதுரையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200-க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்து பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்தனியார் துறைவேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை http://www.tnprivatejobs.tn.<wbr />gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று வேலைநாடுநர்கள் தங்களது சுய விபர குறிப்பு (BIO DATA), கல்விச் சான்றிதழ்களின் நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும், இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article