விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்று தொடங்கியது.

பிக்பாஸ்:

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக போட்டியாளர்களில் ஒருவராக பிரபல திரைப்பட விமர்சகரும், நடிகருமான பிரசாந்த் பங்கேற்றார். இந்த முறை 3 போட்டியாளர்களில் 2 போட்டியாளர்களுக்கே அனுமதி என்று புதிய விதியில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அனுப்பப்பட்டனர். ஆனால், பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்ல முடியாமல் வாக்கெடுப்பிலே வெளியேற்றப்பட்டார்.

விஜய்க்கு புகழாரம்:

Planned & Targeted eviction very unfair by Vijay TV#BiggBossTamil #BiggBossTamil10
pic.twitter.com/V0UU2givd4

— SmartBarani (@SmartBarani) September 6, 2026

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் பேசும்போது, விஜய் குருநாத சேதுபதி இன்று விஜய் சேதுபதியாக நிற்பதற்கு செளகரியத்தை கடந்து வந்ததே ஆகும். நடிகர் விஜய் இன்று முதல்வர் விஜய்யாக மாறியதும் செளகரியமான நிலையை கடந்ததே காரணம் ஆகும். எப்போது எல்லாம் நாம் செளகரியமான நிலையிலே இருக்கிறோமோ அப்போது வாழ்க்கை தேக்கம் அடைகிறது என்று அர்த்தம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. விஜய்யை அவர் பாராட்டி பேசிய வீடியோவை விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் பகிர்ந்து வருகின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் 10வது சீசனில் போட்டியாளர்கள் லட்சுமி ப்ரியா, ஜாவித் ஷெரிப், முனியம்மாமள், வினோத் பாபு, பாண்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரை வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே களமிறக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article