Bank Strike Postponed: வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால், நாடு முழுவதும் இன்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்:

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று தொடங்கி 3 நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் அரையாண்டு கணக்குகள் முடிக்கும் பணியுடன் ஒரே நேரத்தில் ஏற்படவிருந்த இடையூறுகள் தவிர்க்கப்பட்டு, நாடு முழுவதும் வங்கிக் கிளைகள் இன்றுவழக்கம் போல் செயல்பட உள்ளன. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற வங்கி தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஆராய, ஒரு உயர்மட்டக் குழுவை உடனடியாக அமைக்க இந்திய வங்கி சங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்..!

வங்கி ஊழியர்களுக்கு தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுகின்றன. இந்நிலையில் மீதமுள்ள சனிக்கிழமைகளையும் தங்களுக்கு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பும் அடங்கிய கூட்டுக்குழு உடனடியாக அமைக்கப்பட்டு, கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்காம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் குறித்து விவாதிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தொழிற்சங்கங்களின் ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு, அரசின் திட்டத்தில் மாற்றங்களை இந்திய தொழிற்சங்க ஆணையம் (IBA) பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது?

நீண்ட வேலை நேரங்களைக் காரணம் காட்டி, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஐந்து நாள் வங்கி வாரம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளப்படவும் இல்லை, முந்தைய ஊதியப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படவும் இல்லை என அரசாங்க தரப்பு தெரிவித்தன. இந்நிலையில் தான் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முன்மொழிந்திருந்தனர். இந்நிலையில் அரசு தரப்புடனான பேச்சுவார்த்தை மூலம் தற்போதைய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

முன்கூட்டியே செலுத்தப்பட்ட ஊதியம்:

செப்டம்பர் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டு இருந்த வேலைநிறுத்தம் வங்கி சேவைகளை பாதிக்கக்கூடும் என்றும், குறிப்பாக அரையாண்டு இறுதித் தேதியை உள்ளடக்கியிருப்பதால் இந்த பாதிப்பு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்றும் நிதி அமைச்சகம் எச்சரித்திருந்தது. அரசாங்க ஊழியர்களுக்கு முன்கூட்டியே மாத சம்பளம் வரவு வைக்கப்பட்டது. , வாடிக்கையாளர்களுக்கு சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை அன்றும் செயல்பட்டன. ஆனால், தற்போது போராட்டம் கைவிடப்பட்டதால் இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article