மக்களின் அன்றாட தேவைகளில் வங்கிகளின் சேவைகள்

இன்றைய நவீன வாழ்க்கையில் உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. அந்த வகையில் மொபைல் போனில் இருந்தே அனைத்து வகையான சேவைகளையும் மேற்கொள்ள முடியும். ஏடிஎம், இணைய வங்கி, மொபைல் வங்கி, UPI போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் பணம் செலுத்துதல் மற்றும் பணப் பரிமாற்றம் செய்தல் எளிதாகியுள்ளது. மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் இணையவழியாகச் செலுத்த முடிகிறது. அந்த வகையில் வங்கிச் சேவைகள் மக்களின் அன்றாட தேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பணத்தை பாதுகாப்பாக சேமிப்பது முதல் பணப் பரிமாற்றம் வரை பல்வேறு சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.

வங்கிகள் 5 நாட்கள் தொடர் விடுமுறை

சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை போன்ற வசதிகள் மூலம் மக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க முடிகிறது. மேலும், கல்வி, வீடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அரசின் நலத்திட்டப் பணப்பரிமாற்றங்களும் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாகச் சென்றடைகின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி சேவைகள் பாதிப்பு.?

இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது. வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, கடன் தொடர்பான பணிகள் போன்ற சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி வருமானத்தை நம்பியுள்ள மக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இணைய வழிச்சேவைகள் தொடரும்

அதே நேரம் ஏடிஎம் மற்றும் இணையவழிச் சேவைகள் தொடர்ந்து இயங்கினாலும், சில வங்கி சார்ந்த பணிகள் தாமதமாகலாம். இதனால் வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையில் வங்கி வேலைநிறுத்தம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில்,

pic.twitter.com/UA0wJrsOMI

— State Bank of India (@TheOfficialSBI) September 19, 2026

வாடிக்கையாளர் அறிவிப்பு

ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU), செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வேலைநிறுத்தக் காலத்தில் அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வழங்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் வேளையில், வாடிக்கையாளர்கள் பின்வருமாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகளை வேலைநிறுத்தத் தேதிகளுக்கு முன்பே முடித்துக் கொள்ளவும்.

தங்கள் பணத் தேவைகளுக்கு ஏடிஎம்கள்/ADWM-களைப் பயன்படுத்தவும்.

வாடிக்கையாளர் சேவை மையங்களைப் (CSPs) பயன்படுத்தவும்.

இணைய வங்கிச் சேவை, YONO, மொபைல் வங்கிச் சேவை, UPI மற்றும் பிற டிஜிட்டல் வழிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும். வேலை நிறுத்தத்தால் ஏற்படும் சிரமங்களுக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம் என ஸ்டேட் பேங்க் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article