Bank Holidays In October 2026: அக்டோபர் மாதத்திற்கான 16 நாட்கள் வங்கி விடுமுறை என்பது மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அக்டோபர் மாத வங்கி விடுமுறை:

அக்டோபர் மாதத்தில் வங்கிக் கணக்கில் பணத்தை போடுவது, எடுப்பது, காசோலையை பணமாக மாற்றுவது, லாக்கரை அணுகுவது என பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீரா? அதற்கு முன்பாக இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த பகுதிகளில் வங்கிகள் இயங்கும், இயங்காது என்பதற்கான நாட்காட்டியை அறிந்துகொள்வது நல்லது. ரிசர்வ் வங்கி தகவல்களின்படி, அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்கள் என்பதுமாநிலங்களைப் பொறுத்து மாறுபடும். இந்திய ரிசர்வ் வங்கியின் 2026 அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்காட்டியில், வழக்கமான ஞாயிறு மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறைகளுடன், தசரா, துர்கா பூஜை, லட்சுமி பூஜை, கர்வ சௌத் மற்றும் பிற பிராந்திய பண்டிகைகளுக்கான விடுமுறைகளும் அடங்கும்.

வார விடுமுறை நாட்கள்:

தேதிகளும் இடங்களும் வேறுபட்டாலும், வார விடுமுறை நாட்கள் என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். 4 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி, அக்டோபர் 10 மற்றும் 24 என்ற இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. இதுபோக காந்தி ஜெயந்தி, விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை என்பது போன்ற பல பண்டிகைகளை முன்னிட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

அக்டோபர் 2 (மகாத்மா காந்தி ஜெயந்தி): தேசிய விடுமுறை. நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 10 (மகாலய அமாவாசை): பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 17 (மகா சப்தமி): அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 19 ( தசரா /மகா நவமி/ஆயுத பூஜை/துர்கா பூஜை): அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, இம்பால், இட்டாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் கிளைகள் மூடப்படும்

அக்டோபர் 20 (தசரா/விஜயதசமி/மகாநவமி): கேங்டாக் மற்றும் இம்பால் தவிர, பெரும்பாலான முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 21 (விஜய தசமி/துர்கா பூஜை): அகர்தலா, பெங்களூரு, கேங்டாக், குவஹாத்தி, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கிளைகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 22 மற்றும் 23 (துர்கா பூஜை/தசேன்): கேங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 26 (லட்சுமி பூஜை/அரியணை ஏறிய நாள்/மகரிஷி வால்மீகி பிறந்தநாள்): அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள கிளைகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 29 (கர்வா சௌத்): சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

அக்டோபர் 31 (சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாள்): அகமதாபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

இதையும் படியுங்கள்: Skoda Price: இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?

பொதுமக்கள் கவனத்திற்கு..!

வங்கி விடுமுறை நாள் என்பது அனைத்து வங்கிச் சேவைகளும் நின்றுவிடுகின்றன என்று பொருளல்ல. நேரடி வங்கிக் கிளை தேவைப்படாத பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். லாக்கர் அணுகல், ட்ராஃப்ட் வழங்குதல், குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகள், காசோலை தொடர்பான பணிகள் அல்லது கிளை ஊழியர்கள் தேவைப்படும் ஆவணப் பணிகள் போன்ற சேவைகளுக்கு தேவைப்படும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுதல் வேண்டும். அக்டோபர் மாதத்தின் பல விடுமுறைகள் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே உரியவை என்பதால், நீங்கள் செல்ல விரும்பும் கிளைக்கான விடுமுறை அட்டவணையைச் சரிபார்ப்பது தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க உதவும்.

Source: Read Full Article