Attack On Mecca: ஹவுதி ஆயுதப்படையினரால் சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் சூழலில், மெக்கா மீதான தாக்குதல் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மெக்கா மீது தாக்குதல் - வரலாற்றில் முதல் முறை

சவுதி அரேபியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பானது புனித நகரமான மெக்கா & ஜித்தா, தாயிஃப் ஆளுநரகங்கள் உட்பட, நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள பல நகரங்களில் செவ்வாயன்று வான்வழி தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே அந்த எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன. மெக்கா மீது வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சமீப நாட்களாக ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதி ஆயுதக்குழுவினரால் சவுதி அரேபியா தாக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, இந்த முன்னெப்போதும் இல்லாத எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடரும் ஹவுதி தாக்குதல்..!

மெக்காவின் தெற்கே தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாக, ஹவுதியின் ஆளில்லா விமானம் ஒன்றை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெப்போதும் இல்லாத எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரான் ஆதரவு ஹவுதிக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கத்திற்கும் இடையே ரியாத்தில் புதிய மோதல் நீடித்து வரும் நிலையில், ஹவுத்திகள் சவுதி அரேபியா மீது கடல்வழி முற்றுகையை அறிவித்து, செங்கடலில் உள்ள அதன் கப்பல்களைக் குறிவைத்துள்ளனர். இஸ்ரேலிய செய்தித்தாளான ஹயோமின் அறிக்கையின்படி, மதீனாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மெக்கா தாக்குதல் - ஹவுதி மறுப்பு

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் சவுதி நகரமான மெக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ரியாத் வெளியிட்ட அறிக்கைய பொய் என ஹவுதிகள் குறிப்பிட்டுள்ளன. ஹவுதிகளின் அரசியல் குழுவைச் சேர்ந்த ஹசிம் அல்-அசாத் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மக்காவைத் தாக்குவது பற்றிய கூற்றுக்கள், முன்பே பயன்படுத்தப்பட்ட ஒரு பழைமையான பொய்யாகும், அது இனி யாரையும் ஏமாற்றாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்

ஹவுதி - சவுதி மோதல்

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹவுதி அமைப்பினர் இந்த வாரம் சவுதி அரேபியாஇல்லாத மிகக் கடுமையான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதில், எண்ணெய் தளங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் உட்பட 73 பேர் காயமடைந்தனர். திங்களன்று மேற்கு ஏமனில் ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் எட்டு அரசாங்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள கமிஸ் முஷைத்தில் இருக்கும் கிங் காலித் விமானப்படைத் தளத்தின் மீது டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி ஒரு புதிய பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தொடரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

Source: Read Full Article