கோயிலில் மொபைல் போனுக்கு தடை

கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும்,கடந்த 1ஆம் தேதி முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயிலுக்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்பு கவுண்ட்டர்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தரிசனம் முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மொபைல் போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் பக்தர்கள்

அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மொபைல் போனை ஒப்படைக்கவும், திரும்ப பெறவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக வேண்டிய நிலையானது உள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக வி தீ லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

பக்தர்கள் அவதி- அண்ணாமலை

மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.

மொபைல் போன் தடை- திரும்ப பெறுக

எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல என அந்த பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article