ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!

ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக உள்ளது.

தீவிர பரப்புரையில் அதிமுக:

இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக வசம் இருந்த நிலையில், இந்த தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று அதிமுக மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால், இரு தொகுதியிலும் அதிமுக மிகவும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத் களமிறங்கியுள்ளார்.

முந்தானையில் முடிந்து வையுங்கள்:

அவரும், அதிமுக நிர்வாகிகளும் அந்த தொகுதியில் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கணிதா சம்பத்திற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பெண் பேச்சாளர் ஒருவர் பெண்களை நோக்கி, 6ம் தேதி வரை வீட்டுக்காரர்களை முந்தானையிலே முடிந்து வச்சுக்கோங்க. அவுத்து ஏதும் விட்ற போறீங்க. நல்லா முருங்கைக்காய் எல்லா கிராமத்துலயும் விளையுது. நல்லா முருங்கைக்காய், முருங்கைக் கீரை சமைத்து மச்சானை அசத்து. 10 நாள் முருங்கைக்கீரையில குளிப்பாட்டு மச்சானை.

இவ்வாறு அவர் பேசினார்.

இரட்டை அர்த்த பேச்சுக்கள்:

தேர்தல் பரப்புரையின்போது தொகுதி மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள், தொகுதியின் பிரச்சினைகள், தொகுதியின் கடந்த கால உறுப்பினர்கள் செயல்பாடுகள் ஆகியவை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் பேச்சாளர் இரட்டை அர்த்தத்தில் பேசியிருப்பது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இணையதள வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் மேடைகளில் இதுபோன்ற இரட்டை அர்த்த, ஆபாச பேச்சுகள் அரசியல் மேடையில் காணப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் கண்டனங்களை குவித்த நிலையில், தற்போது இணையதள வளர்ச்சி காலத்திலும் இதுபோன்ற இரட்டை அர்த்த பேச்சுகள் தொடர்கிறது.

தொகுதியை பறிகொடுத்த இந்த இடைத்தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ள நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள் தொகுதியில் அதிமுக-வை மேலும் பலவீனப்படுத்தும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் இபிஎஸ் பரப்புரை:

மதுராந்தகம் தொகுதி மட்டுமின்றி தாராபுரத்திலும் அதிமுக மிகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் கணிதா சம்பத் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் விரைவில் அதிமுக-விற்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks