AC Bus Shelters: 11 இடங்களில் குளுகுளு பேருந்து நிலையங்கள்..! வை-ஃபை, குடிநீர், சார்ஜிங் பாயிண்ட் - முழு விவரங்கள் இதோ

AC Bus Shelters: 11 இடங்களில் குளுகுளு பேருந்து நிலையங்கள்..! வை-ஃபை, குடிநீர், சார்ஜிங் பாயிண்ட் - முழு விவரங்கள் இதோ
News Image

Chennai AC Bus Shelters: தலைநகர் சென்னையில் எந்தெந்த இடங்களில் ஏசி வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ள என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏசி வசதியுடன் கூடிய 11 பேருந்து நிலையங்கள்:

சென்னையில் குறிப்பிட்ட 11 இடங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் விரைவில், குளிர்சாதன பெட்டி வசதியுடன் கூடிய பேருந்து நிலையங்களை பெற உள்ளனர்.  இதுபோக அங்கு குடிநீர், விலையில்லா வை-ஃபை, சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் எளிய அணுகலுக்கான சாய்வுதளம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளனவாம். CSR எனப்படும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து, சோதனை முயற்சியாக இத்தகைய பேருந்து நிலையங்களை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

நவீன பேருந்து நிலையங்களில் வசதிகள் என்ன?

புதிய பேருந்து நிலையங்கள் வழக்கமானதை போன்று இல்லாமல், வலுவான அல்லது லேமினேடட் கண்ணாடிகளை கொண்டு முழுமையாக மூடப்பட்ட, ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை அமைக்கப்பட உள்ளது. இந்த அனைத்து நிறுத்தங்களிலும், அங்கு நிற்கும் அனைத்து பேருந்துகளும் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லுமென்ற விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.  இதுபோக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேனிக் பட்டன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.

ஏசி பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள் எவை?

சென்னையில் ஏசி உள்ளிட்ட நவீன வசதிகள் அடங்கிய 11 பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா சாலையில் DMS பகுதி, மயிலாப்பூர் பேருந்து நிலையம், வடபழனியில் ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரியில் விஜய் நகர் பேருந்து முனையம், வடபழனி பேருந்து நிலையம் SIMS மருத்துவமனைக்கு வரும் வழியில், வடபழனி பேருந்து நிலையம் SIMS மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வழியில், லிட்டில் மவுண்ட், கிண்டி, ஆற்காடு சாலையில் அவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு முனை ஆகிய 11 இடங்களில் ஏசி வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஒப்பந்தமிட்டுள்ள நிறுவனங்களின் விவரங்கள்:

அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, குரு நானக் கல்லூரி, SIMS மருத்துவமனை, ரோகினி ஓட்டல்கள், SRM ப்ரைம் ஹாஸ்பிடல் மற்றும் ஃப்ரேயர் சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களானது ஏசி வசதியுடன் கூடிய பேருந்து நிலையங்களை கட்டுவதோடு, பாதுகாவலர்களையும் நியமித்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. இதற்கு நிகரான இந்த பேருந்து நிறுத்தங்களில் எந்தவித கட்டணமும் இன்றி தங்களது நிறுவனங்களில் விளம்பரங்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: Besant Nagar Beach: அப்க்ரேடாகும் பெசன்ட் நகர் பீச் - வரப்போகும் புதிய வசதிகள் என்ன? ஆக்கிரமிப்புகள் அகற்றம்?

திட்டத்தின் இலக்கு என்ன?

அதிக பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களை நவீனமயமாக்கும்  முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளதாக சமீரன் தெரிவித்துள்ளார். அண்ணா சதுக்கம் போன்ற இடங்களில் பெரிய நிழற்குடைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அதே சமயம் வேறு சில இடங்களில் குளிரூட்டல் வசதி இல்லாத நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். இதேபோன்ற கூட்டு முயற்சிகள் மூலம்  பரபரப்பான இடங்களில் நடை மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். இதற்காக 56 சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றில் 10 இடங்களுக்கு விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks