Aadhav arjuna: "ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஆணவம் எட்டிப்பாக்குது.." தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

Aadhav arjuna: "ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஆணவம் எட்டிப்பாக்குது.." தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!
News Image

தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக அமைச்சர்களின் செயல்பாடு பற்றி பேசினார்.

அப்போது, அவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

ஆணவம் எட்டிப் பார்க்கிறது:

ஆதவ் அர்ஜுனா முதலில் திமுக. அதன்பிறகு விசிக. அதன்பின்பு தமிழக வெற்றிக் கழகம். கடைசியில் ஒரு சரியான நடவடிக்கைதான். ஆனால், அவர் சட்டமன்றத்தில் பேசும்போது பல பேரின் துறையை, நான் ஒரு நகைச்சுவை படித்தேன். விவசாயத்திற்கு பதில் சொல்கிறாரே, அவர் விவசாயத்துறை அமைச்சரா? இல்லை, இல்லை அவர் கல்வித்துறை அமைச்சர்.

கல்வியில் ஒரு பிரச்சினை வருதே, அப்போது ஒரு பதில் சொல்கிறாரே அவர் நிதித்துறை அமைச்சர். ஆக, அனைத்திற்கும் அவர் சில நேரங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால் விளையாட்டாக சில நேரங்களில் கருத்து சொல்கிறார். சில நேரங்களில் கொஞ்சம் அவரோட ஆணவம் தலை காட்டுகிறது.

ஆக்கப்பூர்வமான பேச்சு:

இன்னும் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக பேசப் பழகுங்கள். லாட்டரியில் நீங்கள் 900 கோடியா? நாங்கள் 900 கோடியா? நீங்க அதிக கார்கள் வச்சு இருக்கீங்களா? நாங்க அதிக கார் வச்சு இருக்கீங்களா? இது போன்ற பேச்சுக்களை எல்லாம் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும். அனைத்துமே தான்தான் என்ற எண்ணம் இல்லாமல் அனைவருக்கும் அந்த வாய்ப்பை கொடுத்து பணியாற்ற வேண்டும். திருத்திக் கொள்ள முடியாதவர்கள் இல்லை என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசும் கருத்துக்கள் தினசரி விவாதப்பொருளாகவே மாறி வருகிறது. குறிப்பாக, திமுக-வின் முன்னாள் அமைச்சர்களுடன் சட்டசபையில் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். தேமுதிக எம்எல்ஏ-வான பிரேமலதா விஜயகாந்த் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசினாலே பிரச்சினை என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதவ் அர்ஜுனா மட்டுமின்றி அமைச்சர்கள் செங்கோட்டையன், ரமேஷ், ஆனந்த், கீர்த்தனா, சரத்குமார், நிர்மல்குமார் என பலரையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, அவர்களைப் பற்றி நேர்மறையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.

பாராட்டியும் திருத்தலாம்:

மேலும், அவர் பேசும்போது இவர்கள் அனைவரின் நேர்மறை கருத்தைத்தான் நான் சொன்னேன். இதில், எதிர்மறை கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், எல்லாரும் புதியவர்கள். அதிகமாக பணியாற்றுவதற்கு ஊக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் ஆதரவாக இருக்கிறார். அதனால், விமர்சனம் செய்து மட்டுமே மற்றவர்களை திருத்த வேண்டும் என்று இல்லை. பாராட்டியும் அவர்கள் நன்றாக பணியாற்ற வேண்டும் என்று சொல்லலாம் என்றும் அவர் பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks