ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியா.?

அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது அரசு ஊழியர்கள் தான், எனவே அரசு என்ன தான் திட்டங்கள் செயல்படுத்தினாலும், அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் பணியாற்றும் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார்களா என்பது குறித்த விவரங்களை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

23 ஆம் தேதிக்குள் லிஸ்ட்

அந்த வகையில், சுகாதாரத்துறையின் இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்,சம்பந்தப்பட்ட அலுவலர்களின் விவரங்களை ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களின் பட்டியலை தயார் செய்து வருகிற 23.09.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவு விவரங்களையும் அறிக்கையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பணியிட மாற்றம்

மேலும் பதவி உயர்வு காரணமாக வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் கடைசியாக பணியாற்றிய பணியிடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களின் விவரங்களையும் வழங்குமாறு அந்த கடித்ததில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து இயக்குநரகங்களும் தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட விவரங்களை தொகுத்த அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் “மிகவும் அவசரம்” (MOST URGENT) எனக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொந்த ஊரில் ஒரே இடத்தில் பணியாற்றும் தங்களை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிடுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Source: Read Full Article