ரயில்வேயில் 590 துணை மருத்துவப் பணியிடங்கள்! ரூ.44,900 வரை சம்பளம்... அக். 14-க்குள் விண்ணப்பிக்கணும்

ரயில்வேயில் 590 துணை மருத்துவப் பணியிடங்கள்! ரூ.44,900 வரை சம்பளம்... அக். 14-க்குள் விண்ணப்பிக்கணும்
News Image

சென்னை: இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு! ரயில்வேயில் காலியாக உள்ள 590 துணை மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

நர்சிங் சூப்பிரண்டென்ட், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அக்டோபர் 14-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு என்னென்ன கல்வித்தகுதிகள் தேவை? வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

590 காலிப்பணியிடங்கள்: என்னென்ன பணிகள்?

இந்திய ரயில்வேயில் மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பிரிவுகளில் மொத்தம் 590 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணிவாரியான காலியிடங்கள் மற்றும் மாதச் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணி காலியிடங்கள் மாதச் சம்பளம்

நர்சிங் சூப்பிரண்டென்ட் ரூ.44,900
டயாலிசிஸ் டெக்னீஷியன்  ரூ.35,400
சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் நிலை- ரூ.35,400
ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்  ரூ.35,400
மருந்தாளுநர் (நுழைவு நிலை)  ரூ.29,200
எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் ரூ.29,200
இசிஜி தொழில்நுட்ப வல்லுநர்  ரூ.25,500
ஆப்டோமெட்ரிஸ்ட் ரூ.25,500
ஆய்வக உதவியாளர் நிலை- ரூ.21,700

குறிப்பு: மேற்கண்ட சம்பளத்துடன் விதிகளின்படி அனுமதிக்கப்படும் கூடுதல் படிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.

கல்வித்தகுதி என்ன?

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நர்சிங், மருந்தியல், மருத்துவ ஆய்வகம், கதிரியக்கவியல் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான கல்வித்தகுதி, தேவையான சான்றிதழ்கள் மற்றும் பிற நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வயது வரம்பு எவ்வளவு?

2026 ஜனவரி 1-ம் தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தகுதி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். இந்த நடைமுறைகளை நிறைவு செய்யும் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வில் பங்கேற்ற பின்னர், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் RRB விண்ணப்ப இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 14, 2026.

ரயில்வேயில் மருத்துவம் மற்றும் துணை மருத்துவத் துறைகளில் பணிபுரிய விரும்புவோர் கடைசி நாள் வரை காத்திருக்காமல், தங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பைச் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியம். அருமையான வாய்ப்பு. தவற விட்டு விடாதீர்கள் நண்பர்களே. கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள். கால தாமதம் நல்ல வாய்ப்பை பறித்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையா என்பதையும் நன்கு தெரிந்து கொண்டு விண்ணப்பத்தை இன்றே அனுப்பி விடுங்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks