சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!

சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
News Image

சென்னை : இந்தியாவிலேயே நச்சுக்காற்று அதிகம் உள்ள நகரமாக சென்னை இருக்கிறது சென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்நாளில் 4 வருடம் குறைந்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன சென்னையில் இருப்பவர்கள் 60 வயதுக்கு பதிலாக 56 வயதிலேயே உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு.

உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுச்சூழல் சம்பந்தமான கருத்தரங்கங்களில் பங்கேற்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ஐயா அவர்களுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து பேச தொடங்குகிறேன். இன்று செப்டம்பர் 7 உலக தூய காற்று நாள். நல்ல சுற்றுச்சூழல் என்பது அடிப்படை உரிமை. நச்சு சூழல் இருக்கக் கூடாது.சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர் இருக்க வேண்டியது நம்முடைய உரிமை அதை கொடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் உரிமை உள்ளாட்சிக்கும் அந்த கடமை இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சென்னையில் நல்ல காற்றே இல்லை. இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல காற்று இருக்கக்கூடிய நகரம் இந்தூர் கடைசி இடத்தில் சென்னை இருக்கிறது. அவ்வளவு மோசமான நச்சு கலந்த சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள் வருடத்திற்கு 11 ஆயிரம் பேர் சென்னையில் மட்டும் நச்சு காற்றால் உயிரிழந்து வருகிறார்கள். நச்சு காற்றின் மூலமாக பொருளாதார இழப்பு அதிக அளவில் நடைபெறுகிறது.
சென்னையில் மற்றும் நச்சு காற்றின் மூலமாக நான்கு ஆண்டு அவர்களது ஆயுசு குறைந்துள்ளது 60 ஆண்டு வாழ வேண்டியவர்கள் 56 ஆண்டிலேயே உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கொடுத்த தொகையில் 194 கோடி செலவு செய்யப்படாமல் அப்படியே உள்ளது இது தூய காற்றை உருவாக்குவதற்காக மத்திய அரசு நம்முடைய மாநில அரசுக்கு கொடுத்த நிதி அதை கூட நம்முடைய மாநில அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. சென்னையில் காற்று ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்று சென்னை ஐஐடி ஒரு ஆய்வு செய்து இருக்கிறார்கள் அந்த அறிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கை வெளியில் வந்தால் தான் காற்று எப்படி யாரால் மாசு உருவாகிறது என்ற உண்மை வெளிவரும்
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் முதல் மணலி வரை அனல் மின் நிலையத்தால் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ரசாயனம் கலப்பட கூடிய காரணத்தால் மேலும் பல நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் மிகவும் பாவம்.. குரோமியம் கழிவுகள் 30 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 2.5 லட்சம் டன் குரோமியம் கழிவுகள் அப்படியே கொட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு பள்ளிக்கரணையில் தாய்ப்பாலில் டயாக்சின் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கறது.
அப்படியானால் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய தாய்ப்பாலில் கேன்சரை உருவாக்கக்கூடிய டயாக்ஸின் இருக்கிறது.. கடலூரில் இளநீரில் கேன்சர் உருவாக்கக் கூடிய டக்சின் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

டெவலப்மெண்ட் டெவலப்மெணட் என்று சொல்லி நாம் கேன்சர் உருவாக்க வழிவகை செய்து வருகிறோம்..
சுற்றுச்சூழலை கிடைக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் மூட வேண்டும் அன்றைக்கு கூட அமைச்சர்கள் சொன்னார்கள், கண்காணிப்பை கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். போன்ற நச்சு உருவாக்கும் கேன்சர் உருவாக்கக்கூடிய நச்சு ஆலைகளை கண்டறிந்து மூட வேண்டும் அவற்றை தடுக்க வேண்டும். இப்போதுதான் நாம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டில் அதிகம் மாசுபட்டவை என்று பார்க்கும்போது சரபங்கா காவேரி பவானி தாமிரபரணி கூவம் அடையாறு போன்ற ஆறுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன அவற்றை தடுக்க தேவையான நடவடிக்கை வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் அது ராம் சார் நிலமாக அறிவிப்பு வெளியிட வேண்டும். பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் 10 அடிக்கு காண்கிரீட் போட்டு அதற்கு மேல் நடை பாதை போட்டு இருக்கிறார்கள். 1200 கோடி உலக வங்கியில் கடன் வாங்கி அதில் 21 கோடி செலவு செய்து நடைபாதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன சதுப்பு நிலத்தில் யாராவது நடைபாதை போடுவார்களா? மிகவும் தவறான விஷயம்..
குப்பை மேலாண்மை செய்தாலே போதும் வனத்துறைக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை குறைந்து விடும்.

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதற்கு காரணம் குப்பைகள் தான்.. குப்பையை மேய்வதற்காக தான் சிறு சிறு விலங்குகள் வருகிறது அந்த விலங்குகளை வேட்டையாட பெரிய விலங்குகள் வருகிறது. ஒரு யானை ஒரு நாளைக்கு 150 கிலோ சாப்பிட வேண்டும் அது வனத்தில் கிடைக்காத காரணத்தால் தோட்டத்தை நோக்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 இடங்கள் ராம்சான் நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது அவற்றை வகைப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

நிலவேம்பு,மஞ்சள் ஆகியவற்றை பாதுகாத்தது அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் இல்லை என்றால் அது அமெரிக்க சொந்தம் கொண்டாடி இருக்கும் அதை தடுத்து நிறுத்தி காப்பாற்றி கொடுத்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். மீத்தேன் திட்டங்கள் எரிவாய்வு திட்டங்கள் நிலக்கரி திட்டங்கள் ஆகிய புதிய திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. 13 ஆயிரத்து 604 உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி என்று இருக்கிறது BVR என்று சொல்லக்கூடிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

இதை பராமரித்தாலே அந்த ஊரில் எத்தனை மாடுகள் இருக்கிறது? எத்தனை மரங்கள் இருக்கிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நமக்கு வந்துவிடும். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்று என்று சொல்வார்கள் அதற்கு நொய்யல் ஆற்றை பராமரிக்க வேண்டும்.  காவல்துறையின் அனைத்து சுற்று அறிக்கைகளும் அரசாணைகள் பாதுகாப்பு திட்டங்கள் என அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். காவல்துறையில் பதிவு செய்யப்படும் எஃப் ஐ ஆர் ஐ புகார்தாரர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks