தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஜூலை மாதத்தோடு முடிவடையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (28-09-2026) கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

எந்த எந்த மாவட்டத்திற்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (29-09-2026) ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை

நாளை மறுநாள் (30-09-2026) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு

இன்று (28-09-2026) மற்றும் நாளை (29-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல்பகுதிகள்:

28-09-2026: வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-09-2026 மற்றும் 30-09-2026: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article