கேரளா ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று நடக்கிறது. முதல் பரிசு ரூ.30 கோடி வென்றால், வரி, கமிஷன் போக ரூ.15 கோடி மட்டுமே கிடைக்கும். கேரளா ஓணம் பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் இன்று நடக்கும் நிலையில் முதல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.30 கோடி ஜெயித்தால் வரி போக உங்கள் கையில் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? லாட்டரி கமிஷன், டிடிஎஸ் வரி போக கையில் கிடைப்பது பாதிக்கு பாதியாகத்தான் இருக்கும்.

கேரளா அரசு ஓணம் பம்பர் லாட்டரி பரிசு தொகையாக ரூ.30 கோடியை முதல் பரிசாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.500 என மொத்தம் 90 லட்சம் டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்டு அதில் நேற்று வரை 99 சதவீதம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. ரூ.30 கோடி ஓணம் பம்பர் லாட்டரியை வெல்லும் நபர் யார் என்பதற்கான குலுக்கல் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியின் பரிசு தொகையாக ரூ.25 கோடி இருந்த நிலையில் இந்த வருடம் ரூ.30 கோடியாக அறிவிக்கப்பட்டது.

ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.30 கோடி ஜெயித்தாலும் அந்த தொகை அப்படியே அவரின் கைக்கு கொடுக்கப்படாது. இதற்கான லாட்டரி கமிஷன், டிடிஎஸ் வரி பிடித்தம், செஸ் வரி என அனைத்தும் போக பரிசு தொகையில் பாதி தொகைதான் கைக்கு வரும். அதாவது சுமார் ரூ.15 கோடி வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும். ரூ.500 கொடுத்து லாட்டரி வாங்கியவர்களுக்கு இது ஒரு பம்பர் பரிசாகத்தான் இருக்கும். கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி வென்றால் ஏஜெண்ட் கமிஷனாக 10 சதவீதம் செலுத்த வேண்டியிக்கும். அதன்படி ரூ.3 கோடி ஏஜெண்ட் கமிஷனாக போய்விடும்.

அதற்கு அடுத்தபடியாக டிடிஎஸ் வரிபிடித்தம் 30 சதவீதம் ஆகும். மூன்றாவதாக 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியாகவும், பிடித்தம் செய்யப்படும். சர்சார்ஜ் பிடித்தம் என கிட்டதட்ட 37 சதவீதம் வரியாக மட்டும் போய்விடும். இதை எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் போது வரியாக சுமார் ரூ.14 கோடி வரை செலுத்த வேண்டி இருக்கும். இது போக மீதமுள்ள தொகை உங்கள் கையில் கிடைக்கும். இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி வெல்லும் நபர்களுக்கும் இதே அடிப்படையிலான வரிகள் வசூலிக்கப்படும். அதன்படி பார்த்தால் ரூ.1 கோடி லாட்டரியில் பரிசு தொகை வென்றால் பாதிக்கு மேல் வரிப்பிடித்தம் போக கையில் ரூ.60 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த பரிசுத்தொகையில் சற்று ஏறக்குறைய மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம்.

Source: Read Full Article