2 நாட்களில் மாணவர் பாரதிதாசனுக்கு பணம் வழங்கப்படும்.. பிரச்னைக்கு வன்னி அரசு முற்றுப்புள்ளி!

2 நாட்களில் மாணவர் பாரதிதாசனுக்கு பணம் வழங்கப்படும்.. பிரச்னைக்கு வன்னி அரசு முற்றுப்புள்ளி!
News Image

மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவினங்களுக்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மலேசிய நாட்டில் உள்ள National University of Malesiya என்ற கல்வி நிறுவனத்தில் பாரதிதாசன் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவருக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான ரூ.36 லட்சம் பணம் அளிக்கப்பட்டது. 2026-2027 கல்வியாண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படாதது குறித்து கடந்த மாதம் மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டார். உடனடியாக அவருக்கு கல்வி கட்டணம் ரூ.5.01 லட்சம், வாழ்க்கை செலவினம் ரூ.6.65 லட்சம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 19.50 ரூபாய்க்கு விடுவிடுக்க முந்தைய ஆண்டுக்கான செலவின பட்டியலை சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இன்னும் கல்வி உதவித்தொகை வரவில்லை, என்னை கல்லூரியில் இருந்து நீக்கப் போகிறார்கள் என மாணவர் பாரதி தாசன் வீடியோ போட தவெக அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்தது.

இதற்கு, மாணவர் சமர்பித்த ஆவணங்கள் ஏற்புடையதாக இல்லை, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமும் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பப்பட்டுள்ளது என சமூக நீதித்துறை விளக்கம் அளித்தது. இதனையடுத்து பதிலளித்த மாணவர் பாரதிதாசன், தான் தேவையான ஆவணங்களை மெயிலில் அனுப்பி விட்டதாகவும், பணத்தை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் கூறினார்.

அமைச்சர் வன்னி அரசு

இந்நிலையில் பாரதிதாசனின் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை 2 நாட்களில் வழங்கப்படும். அவரின் கல்விக்கு அனைத்து வகையிலும் தவெக அரசு உதவும். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்று சமூக நீதித்துறையின் விளக்கத்தை அளித்துள்ளோம். தவெக அரசு அமைந்தவுடன் கல்வி உதவித்தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் திமுக ஆட்சியை விட அதிகமாக உள்ளது என விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks