ரூ.27,804 ஊதியத்தில் அரசு வேலை: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ரூ.27,804 ஊதியத்தில் அரசு வேலை: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
News Image

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், 'பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா)' பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாகப் பூர்த்தி செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) -1 பணியிடம் காலிபணியிடமாக உள்ளது. இப்பணியிடம் ஒருவருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு/சமூக நலன் சார்ந்த துறையில் திட்ட உருவாக்கம்/ செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கான ஊதியம் ரூ.27,804/. ஆகும். விண்ணப்பதாரர்கள் 42 வயத்திற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவத்தை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 24.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
(குறிப்பு: இந்தப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது)

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், (பழைய உணவக கட்டிடம்), விழுப்புரம் மாவட்டம் 605 602. தொலைபேசி எண் 04146-290659 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks