தீபாவளி 2026: சென்னை திரும்பும் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!

தீபாவளி 2026: சென்னை திரும்பும் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளுக்கு ஏற்றார்போல் அவ்வப்போது ரயில் நேரங்கள் மாற்றம் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம்.

இந்த 2026ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டவர்கள், அடுத்து ஊரிலிருந்து திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதலில் தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. அதுபோலவே, நாளையும் சென்னைக்கு வரும் விரைவு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே சென்னையை காலி செய்துகொண்டு பலரும் சொந்த ஊர் சென்றுவிடுவார்கள். தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது அதனைத் தொடர்ந்து ஒரு சில நாள்கள் விடுமுறை எடுத்து வார இறுதி வரை அதனை நீட்டித்துக் கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

ஆனால், இந்த ஆண்டு யாரும் விரும்பாத வகையில், ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை. எனவே, ஊருக்குச் செல்வோருக்கான முன்பதிவுகள் கடந்த ஒரு சில நாள்களாக நடைபெற்று வந்தது. நாளை முதல் ஊரிலிருந்து திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிறது.

தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி. தீபாவளி முடிந்து சென்னைக்குத் திரும்ப முன்பதிவு செய்வதற்கு, நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை திரும்புவதாக இருந்தால் செப்.10ஆம் தேதியும், செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு செப்.11ஆம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 11ஆம் தேதி சென்னை திரும்ப செப். 12ஆம் தேதி முன்பதிவு நடைபெறுகிறது.காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. அனைத்து விவரங்களுடன் தயாராக இருந்தால் டிக்கெட் முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks